Tnpsc 10th geography important question and answer in tamil pdf download,tnpsc group 4 geography study material,tnpsc gk,group 2 tnpsc notes in tamil
TNPSC , TET, POLICE, RRB Exams - Important Geography One Line Questions with Answers
அனைத்து போட்டி தேர்வுளுக்கும் உதவும் வகையில் 10 ம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் புவியியல் (Geography) பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள். இந்த வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் இடம்பெறும்.
![]() |
Day 5 - 10th Geography Important Oneline Questions & Answers |
- Day 5 : புதிய முயற்சி
- Topic : 10th Geography Unit 2 - இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்.
10th Geogrphy - One Line Questions & Answers
Unit 1 - இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
- Day 1 (1 to 31 வினாக்கள் ) - Download
- Day 1 Test - Click Here
- Day 2 (32 to 62 வினாக்கள் ) - Download
- Day 2 Test - Click Here
- Day 3 (63 to 88 வினாக்கள் ) - Download
- Day 4 (89 to 147 வினாக்கள் ) - Download
Day 5 - 1 முதல் 42 வினாக்கள் வரை
உங்களுக்குத் தெரியுமா ?
1) அதிக வெப்பம் உடையதாகவோ அல்லது அதிக குளிர் உடையதாகவோ இல்லாத காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது - சமச்சீர் காலநிலை அல்லது பிரிட்டிஷ் காலநிலை.
இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
2) இந்தியாவின் வட அட்சரேகை பரவல் யாது - 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரை.
3) புவிப் பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எந்த அளவு வெப்பநிலை குறைகிறது - 6.5 டிகிரி செல்சியஸ்.
4) இயல்பு வெப்ப வீழ்ச்சியில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எந்த அளவு வெப்பநிலை குறைகிறது - 6.5 டிகிரி செல்சியஸ்.
5) இந்தியாவில் சூரியனின் செங்குத்து கதிர்கள் எப்பொழுது விழுகின்றன - ஜூன் மாத மத்தியில்.
6) ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை குறிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது - வானிலை.
7) ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 முதல் 35 ஆண்டு சராசரி வானிலையை குறிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது - காலநிலை.
8) வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - ஜெட் காற்றுகள்.
9) தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வுகளை உருவாக்கும் காற்றோட்டம் எது - ஜெட் காற்றோட்டம்.
பருவக்காற்று
10) மான்சூன் என்ற சொல்லின் பொருள் யாது - பருவ காலம்.
11) பூமியிலேயே மிகவும் வறண்ட பகுதி எது - அடகாமா பாலைவனம்.
12) குளிர்காலம் என்பது எந்த மாதத்தில் வரும் - ஜனவரி முதல் பிப்ரவரி.
13) கோடை காலம் என்பது எந்த மாதத்தில் வரும் - மார்ச் முதல் மே.
14) தென்மேற்கு பருவக்காற்று காலம் எந்த மாதத்தில் வரும் - ஜூன் முதல் செப்டம்பர்.
15) வடகிழக்கு பருவக்காற்று காலம் எந்த மாதத்தில் வரும் - அக்டோபர் முதல் டிசம்பர்.
16) எந்த பருவக்காற்று காலம், மழை காலம் என்று அழைக்கப்படுகிறது - தென்மேற்கு பருவக்காற்று காலம்.
17) இந்திய காலநிலை எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது - 4 பருவங்கள்.
- கோடை காலம்
- குளிர்காலம்
- தென்மேற்கு பருவக்காற்று காலம்
- வடகிழக்குப் பருவக் காற்றுக் காலம்
18) கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விலையும் மாங்காய்கள் விரைவில் முடிப்பதற்கு உதவும் இடியுடன் கூடிய மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது - மாஞ்சாரல்.
19) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட மேற்கு திசையில் இருந்து வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது - கால் பைசாகி அல்லது நார்வெஸ்டர்.
20) தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய காலநிலை நிகழ்வு எது - எல்நினோ.
21) இந்தியாவில் பருவமழை வெடிப்பு என்பது எந்த பருவக்காற்று சார்ந்தது - தென்மேற்கு பருவக்காற்று.
மழைப் பரவல்
22) உலகிலேயே மிக அதிக அளவில் மழை பொழியும் இடம் எது - மௌசின்ராம்(மேகாலயா) & 1141 சென்டிமீட்டர்.
23) தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப் பொழிவில் எத்தனை சதவீதம் தருகிறது - 75 சதவீதம்.
24) பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் பெயர் யாது - கொரியாலிஸ் விசை.
25) பின்னடையும் பருவக்காற்று என்று அழைக்கப்படுவது எது - வடகிழக்கு பருவக்காற்று.
26) இந்தியாவின் ஆண்டு சராசரி மழை அளவு எவ்வளவு - 118 சென்டிமீட்டர்.
இயற்கை தாவரங்கள்
27) அயன மண்டல பசுமை மாறாக் காடுகளின் ஆண்டு மழை பொழிவு எவ்வளவு - 200 சென்டி மீட்டருக்கு மேல்.
28) அயன மண்டல இலையுதிர் காடுகள் இன் ஆண்டு சராசரி மழைப்பொழிவு எவ்வளவு - 100 முதல் 200 சென்டிமீட்டர்.
29) அயன மண்டல வறண்ட காடுகளின் ஆண்டு மழைப்பொழிவு எவ்வளவு - 50 சென்டி மீட்டர் முதல் 100 சென்டிமீட்டர்.
30) ஆண்டுக்கு 50 சென்டிமீட்டர் இருக்கும் குறைவாக மழை பொழிவு தரும் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பாலைவன காடுகள் அல்லது முட்புதர் காடுகள்.
31) தமிழ்நாடு எந்த வகையான அயன மண்டலத்தை கொண்டுள்ளது - அயனமண்டல இலையுதிர் காடுகள்.
32) சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் காணப்படும் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - அல்பைன் காடுகள்.
33) சதுப்பு நில காடுகள் மற்றும் டெல்டா காடுகள் என அழைக்கப்படுபவை எது - ஓத அலை காடுகள்.
34) மகாநதி கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளில் காணப்படும் காடுகள் எது - மாங்குரோவ் காடுகள்.
வன உயிரினங்கள்
35) இந்தியாவில் மொத்தம் எத்தனை வகையான வன விலங்கினங்கள் உள்ளன - 81251.
36) ஆந்திரா மாநிலத்திற்கும் ஹரியானா விற்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் பொதுவான மாநில விலங்கு எது - கலைமான்.
37) இந்திய வனவிலங்கு வாரியம் எப்பொழுது அமைக்கப்பட்டது - 1952.
38) இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது - 1972.
39) இந்தியாவில் தற்பொழுது எத்தனை தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன - 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள்.
40) இந்தியாவில் மொத்தம் எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன - 18 உயிர்க்கோள காப்பகங்கள்.
41) இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 1973.
42) இந்திய காலநிலை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது - அயனமண்டல பருவக்காற்று காலநிலை.
தங்களுடைய கருத்துக்களை கீழ் உள்ள Command Box -ல் தெரிவிக்கவும்.
COMMENTS