Tnpsc 10th geography important online line questions and answers,group4 geography questions and answers,free online coaching for tnpsc,tnpsc gk,group2
TNPSC , TET, POLICE, RRB Exams - Important Geography One Line Questions with Answers
அனைத்து போட்டி தேர்வுளுக்கும் உதவும் வகையில் 10 ம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் புவியியல் (Geography) பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள். இந்த வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் இடம்பெறும்.
![]() |
Day 3 - 10th geography one line question & answer - tnpsc gk |
நமது புது முயற்சியாக முக்கிய ஒரு வரி வினாக்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து தேர்வுகள் வைக்கப்படும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா மற்றும் விடைகளை நன்றாக படித்துவிட்டு நாளை நடைபெறும் தேர்வினை எழுதி பார்க்கவும்.
- Day 3 : புதிய முயற்சி
- Topic : 10th Geography Unit 1 - இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம், வடிகாலமைப்பு.
- Test : நாளை நடைபெறும்.
10th Geogrphy - One Line Questions & Answers
- Day 1 (1 to 31 வினாக்கள் ) - Download
- Day 1 Test - Click Here
- Day 2 (32 to 62 வினாக்கள் ) - Download
- Day 2 Test - Click Here
Day 3 - 63 முதல் 88 வினாக்கள் வரை
உங்களுக்கு தெரியுமா ?
63) சிந்து மற்றும் சட்லெஜ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு யாது - காஷ்மீர் பஞ்சாப் இமாச்சல் இமயமலை பிரிவுகள்.
64) சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது - குமாயூன் இமய மலைகள்.
65) காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது - மத்திய நேபாள இமயமலைகள்.
66) திஸ்தா மற்றும் திகாங் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது - அசாம் கிழக்கு இமயமலைகள்.
வட பெரும் சமவெளிகள்
67) வடபெரும் சமவெளிகளின் மொத்த பரப்பளவு எவ்வளவு - 7 இலட்சம் சதுர கிலோ மீட்டர்.
68) உலகிலேயே மிகவும் வளமான சமவெளியாக கருதப்படுவது எது - வடபெரும் சமவெளிகள்.
69) இமயமலை ஆறுகளால் படிய வைக்கப் பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆன சமவெளி எது - பாபர் சமவெளி.
70) அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட சமவெளிப் பகுதி எது - தராய் மண்டலம்.
71) பழைய வண்டல் மண்ணால் ஆன படிவுகள் கொண்ட சமவெளி எது - பாங்கர் சமவெளி.
72) ஆறுகளால் கொண்டுவரப்பட்ட புதிய வண்டல் மண் படிவுகள் கொண்ட சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது - காதர் சமவெளி அல்லது பெட் நிலம்.
73) ராஜஸ்தான் சமவெளியில் காணப்படும் உப்பு ஏரி எது - ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சாம்பார் ஏரி அல்லது புஷ்கர் ஏரி.
74) காக்காரா, கான்டாக் கோசி, யமுனை, சாம்பல், பெட்வா ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள் - கங்கை நதி.
75) வண்டல் சமவெளியின் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - சார்ஸ்.
76) வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - பில்ஸ்.
தீபகற்ப பீடபூமிகள்
77) தீபகற்ப பீடபூமியின் மொத்த பரப்பளவு எவ்வளவு - 16 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
78) இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை பிரிவு எது - தீபகற்ப பீடபூமி.
79) தீபகற்ப பீடபூமி வடமேற்கே அமைந்துள்ள மலைத்தொடர் எது - ஆரவல்லி மலைத்தொடர்.
80) தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் எது - ஆனைமுடி 2,695 மீட்டர்.
81) தீபகற்ப பீடபூமி யை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கும் ஆறு எது - நர்மதை ஆறு.
82)தீபகற்ப பீடபூமியின் வடபகுதி மற்றும் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - மத்திய உயர் நிலங்கள் மற்றும் தக்காண பீடபூமி.
83) மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் யாவை - நர்மதை மற்றும் தபதி.
84) ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது - குருசிகார் 1722 மீட்டர்.
85) மத்திய உயர் நிலங்களின் மேற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - மாளவ பீடபூமி.
86) மத்திய உயர் நிலங்களின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பகுதி எது - சோட்டா நாகபுரி பீடபூமி.
86) தக்காண பீடபூமி எந்த வடிவத்தில் அமைந்துள்ளது - முக்கோண வடிவம்.
85) தக்காண பீடபூமியின் பரப்பளவு - ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர்.
Important Notes :
86) வடபெரும் சமவெளிகள் - நான்கு வகைப்படும்.
- ராஜஸ்தான் சமவெளி
- பஞ்சாப் ஹரியானா சமவெளி
- கங்கைச் சமவெளி
- பிரம்மபுத்ரா சமவெளி
87) தீபகற்ப பீடபூமி - 2 பிரிவுகளாக உள்ளது.
- மத்திய உயர் நிலம்
- தக்காண பீடபூமி
88) தீபகற்பம்(peninsula) : மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி.
தங்களுடைய கருத்துக்களை கீழ் உள்ள Command Box -ல் தெரிவிக்கவும்.
One liner pdf ah send pannunga sir.
ReplyDeletePrint potu use pannipo.
Download link updated sir..Check it..Thank you..
ReplyDelete