tnpsc geography one line question and answer,tnpsc group 4 geography notes,online coaching for tnpsc,tnpsc gk,group 4 important notes,10th geography
TNPSC , TET, POLICE, RRB Exams - Important Geography One Line Questions with Answers
அனைத்து போட்டி தேர்வுளுக்கும் உதவும் வகையில் 10 ம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் புவியியல் (Geography) பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகள். இந்த வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் இடம்பெறும்.
![]() | |
|
- Day 4 : புதிய முயற்சி
- Topic : 10th Geography Unit 1 - இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம், வடிகாலமைப்பு.
- Test : நாளை நடைபெறும்.
10th Geogrphy - One Line Questions & Answers
- Day 1 (1 to 31 வினாக்கள் ) - Download
- Day 1 Test - Click Here
- Day 2 (32 to 62 வினாக்கள் ) - Download
- Day 2 Test - Click Here
- Day 3 (63 to 88 வினாக்கள் ) - Download
- Day 3 Test - Click Here
Day 4 - 89 முதல் 147 வினாக்கள் வரை
மேற்குத் தொடர்ச்சி மலை
89) மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - சயாத்ரி.
90) ஆனைமலை ஏலக்காய் மலை மற்றும் பழனி மலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள சிகரம் எது - ஆனைமுடி சிகரம்.
91) மலைவாழ் இடமான கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது - பழனி மலை.
கிழக்கு தொடர்ச்சி மலை
92) பூர்வாத்ரீ என்று அழைக்கப்படும் மலை எது - கிழக்கு தொடர்ச்சி மலை.
இந்திய பாலைவனம்
93) தார் பாலைவனம் உலகிலேயே எத்தனையாவது பெரிய பாலைவனம் - 17வது பெரிய பாலைவனம்.
மேற்கு கடற்கரை சமவெளி
94) வடக்கில் ராணா கட்ச் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை நீண்டு உள்ள கடற்கரை சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது - மேற்கு கடற்கரை சமவெளி.
95) மேற்கு கடற்கரை சமவெளியின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - கொங்கண கடற்கரை.
96) மேற்கு கடற்கரை சமவெளியின் மத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - கனரா கடற்கரை.
97) மேற்கு கடற்கரையின் தெற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - மலபார் கடற்கரை.
98) மலபார் கடற்கரையில் காணப்படும் மிக முக்கிய ஏரி எது - வேம்பநாடு ஏரி.
கிழக்குக் கடற்கரைச் சமவெளி
99) கிழக்கு கடற்கரை சமவெளி மொத்தம் எத்தனை மாநிலங்களில் பரவியுள்ளது - நான்கு மாநிலங்கள்.
- மேற்கு வங்காளம்
- ஒடிசா
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு
100) மகாநதி க்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சமவெளி பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - வட சர்க்கார்.
101) கிருஷ்ணா மற்றும் காவேரி ஆற்றில் இற்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சமவெளி பகுதிஎவ்வாறு அழைக்கப்படுகிறது - சோழமண்டல கடற்கரை.
102) உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை எது - மெரினா கடற்கரை சென்னை.
103) இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது - சிலிகா ஏரி.
104) கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றிற்கும் இடையே அமைந்துள்ள ஏரி எது - கொல்லேரு ஏரி.
105) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஏரி எது - பழவேற்காடு ஏரி அல்லது புலிகாட் ஏரி.
தீவுகள்
106) அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களில் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன - 572 தீவுகள்.
107) லட்சத்தீவுகளின் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன -27 தீவுகள்.
108) இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை எங்கு உள்ளது - பாரன் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார்.
109) லட்சத்தீவுகள் எந்த வகையான பாறைகளால் ஆனவை - முருகை பாறைகள்.
110) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிர்வாகத் தலைநகரம் எது - போர்ட் பிளேயர்.
111) அந்தமான் தீவுக் கூட்டங்களையும் நிக்கோபார் தீவு கூட்டங்களையும் பிரிக்கும் கால்வாய் எது - 10 டிகிரி வடக்கு கால்வாய்.
112) நிக்கோபார் இன் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது - இந்திரா முனை.
113) லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைநகரம் எது - கவரத்தி.
114) லட்சத்தீவுகளையும் மாலத் தீவையும் பிரிக்கும் கால்வாய் எது - 8 டிகிரி கால்வாய்.
115) பீட் தீவு பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது - லட்சத்தீவுகள்.
116) லட்சத்தீவு, மினிக்காய் மற்றும் அமினி தீவு கூட்டங்கள் எப்பொழுது முதல் லட்சத்தீவுகள் என்றழைக்கப்படுகின்றன - 1973.
ஆறுகள்
117) முதன்மை ஆறுகளும் துணை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - வடிகால் கொப்பரை.
118) சிந்து நதியின் மொத்த நீளம் எவ்வளவு - 2850 கிலோமீட்டர். இந்தியாவில் 709 கிலோமீட்டர் மட்டுமே பாய்கிறது.
119) சிந்து நதி எங்கு உற்பத்தி ஆகிறது - மானசரோவர்.
120) சிந்து நதியின் மிகப்பெரிய துணை ஆறு எது - சினாப்.
121) ஜீலம் சினாப் ராவி பியாஸ் மற்றும் சடலெஜ் ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள் - சிந்து நதி.
122) இந்தியாவின் மிக நீளமான நதி எது - கங்கை நதி 2525 கிலோமீட்டர்.
123) கங்கை நதி எங்கே தோன்றுகிறது - உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்திரி என்னும் பனியாற்றில்.
124) கங்கை நதி அது தோன்றும் இடத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - பாகிரதி.
125) வங்கதேசத்தில் கங்கை நதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - பத்மா.
126) பிரம்மபுத்திரா ஆறு எங்கே தோன்றுகிறது - கைலாஷ் மலைத்தொடரில் உள்ள செம்மாயுங்கடங் பனி ஆறு
127) பிரம்மபுத்திரா திபெத் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - - சாங்போ(தூய்மை).
128) பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும் பகுதி எது - திகாங் அருணாச்சல பிரதேசம்.
129) பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஜமுனா.
130) பிரம்மபுத்திரா ஆறு கங்கையுடன் இணையும் பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது - மேக்னா.
131) மகாநதி எங்கு உற்பத்தி ஆகிறது - சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மாவட்டத்தில் சிகா.
132) கோதாவரி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது - நாசிக் மகாராஷ்டிரா.
133)விருத்தகங்கா என்று அழைக்கப்படும் ஆறு எது - கோதாவரி.
134) கௌதமி மற்றும் வசிஸ்த என்னும் ஆறுகள் எந்த ஆற்றின் கிளை ஆறுகள் - கோதாவரி.
135) கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது - கொல்லேரு ஏரி.
136) கிருஷ்ணா நதி எங்கு உற்பத்தியாகிறது - மஹாபலேஷ்வர் மகாராஷ்டிரா.
137) தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதி எது - கோதாவரி.
138) காவேரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது - தலை காவேரி குடகு மலை.
139) தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது - காவேரி.
140) காவேரி ஆற்றின் ஆற்று தீவுகள் யாவை - சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கம்.
141) காவேரி ஆறு கடலில் கலக்கும் இடம் எது - பூம்புகார்.
142) கிருஷ்ணா நதி கடலில் கலக்கும் இடம் எது - ஹம்சலா தேவி.
143) நர்மதை ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது - அமர்கண்டாக் மத்திய பிரதேசம்.
144) மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் நீளமானது எது - நர்மதை.
145) தபதி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது - முல்டாய் பெட்டுல்.
146) மத்தியபிரதேசம் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் யாவை - நர்மதை தபதி மற்றும் மாகி.
147) ஜெர்சப்பா ஜோக் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றின் அமைந்துள்ளது - சிராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது 829 அடிகள்.
தங்களுடைய கருத்துக்களை கீழ் உள்ள Command Box -ல் தெரிவிக்கவும்.
Sir pls upload english medium question bank and notes
ReplyDeleteOk sir...
ReplyDelete