6th economics notespdf, tnpsc group 4 economics notes, tnpsc economics notes in tamil pdf, tnpsc economics one liner, group 2, group 4 economics notes
TNPSC Group 1, Group 2, Group 2a, Group 4 - 6th Economics Important Notes
ஆறாம் வகுப்பு பொருளியல் பாடத்தில் உள்ள முக்கியமான வினாக்கள் மற்றும் விடைகள் (6th Economics Important Notes PDF) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Notes மட்டும் படித்தால் போதும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அனைத்து விதமான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் நமது இணைய தளத்தில் கொடுக்கப்படும்.
Notes படி - Test அடி - Job வாங்கு
Important Notes
1) கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு - காந்தியடிகள்
2) உலக மக்கள்தொகையில் 50 % அதிகமான மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர்.
3) தமிழ்நாட்டில் 47% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
4) சந்தை - "கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஒர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.
உங்களுக்கு தெரியுமா (Box Content – Important Points)
Do you Know ? : 6th Economics Notes
1) நுகர்வோர் பொருட்கள்
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள்
அங்காடியிலிருந்து பயன் படுத்தும் வாங்கிப் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள்
என்று அழைக்கப் படுகின்றன.
எ.கா : அரிசி, துணிகள், மிதிவண்டிகள்
2) சேமிப்பு
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
3) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
விளக்கம் : தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் இருப்பது போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் அழியும்.
4) முதல் நிலைத் தொழில்கள்
உணவுத்
தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலைத்
தொழில்கள் எனப்படுகிறது.
➢ வேளாண்மை,
➢ கால்நடைகள் வளர்த்தல்
➢ மீன் பிடித்தல்
கனிமங்கள்,
➢ தாதுப்பொருட்கள் போன்ற
மூலப் பொருள்கள் சேகரித்தல்.
➢ கனிகள்,
கொட்டைகள்,
தேன்,
மூலிகைகள்,
ரப்பர்,
பிசின்
போன்றவை சேகரித்தல்
➢ மரம் வெட்டுதல்.
5) இரண்டாம் நிலைத் தொழில்கள்
முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்றும், தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.
உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
➢ வேளாண் அடிப்படைத்
தொழிற் சாலைகள் - பருத்தி,
சர்க்கரை,
உணவுபதப்படுத்துதல்.
➢ காடுசார்ந்த
தொழிற்சாலைகள் - காகிதத்தொழில்,
மரச்சாமான்கள்,
கட்டுமானப்
பொருள்கள்.
➢ கனிமத் தொழிற்சாலைகள் - சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற
தொழிற்சாலைகள்.
➢ கடல்சார் தொழிற்சாலைகள் - கடல் உணவு பதப்படுத்துதல்.
6) மூன்றாம் நிலைத் தொழில்கள்
முன்னர் கூறிய இரண்டு நிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
➢ போக்குவரத்து - சாலை, ரயில், கடல்,
ஆகாயப்
போக்குவரத்துகள்.
➢ தொலைத் தொடர்பு - அஞ்சல்,
தொலைபேசி,
தகவல்
தொழில்நுட்பம்.
➢ வர்த்தகம் - பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
➢ வங்கி - பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள்.
கலைசொற்கள்
➢ நுகர்வோர் - பொருட்களை பயன் படுத்துவோர்
➢ குடி இருப்பவர்கள் - மனிதர்கள் வாழுமிடம்
➢ Consumer – The one who uses the products
➢ Commodity – Products
➢ Occupation
– Work/Job
➢ Settlement – Living place of human being
6th Economics Book Back Answers
6th to 10th Economics Book Back Answer
- 6th Economics Book Back Answer
- 7th Economics Book Back Answer
- 8th Economics Book Back Answer
- 9th Economics Book Back Answer
- 10th Economics Book Back Answer
COMMENTS