tnpsc group 4 general tamil notes, tnpsc group 4 unit 2 maruvu sorkkal, tnpsc tamil where to study, tnpsc group 2 tamil maruvu, tnpst gk, tnpsc exams
TNPSC Group 2, 2a, Group 4 General Tamil - ஊர்ப்பெயர்களின் மரூஉ சொற்கள் Notes
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் பாடத்திட்டத்தில் அலகு 2 சொல்லகராதி என்பதில் ஊர்ப்பெயர்களின் மரூஉ சொற்கள் என்ற பகுதியில் கேட்டுக்கப்படும் முக்கியமான மரூஉ சொற்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் ஒவ்வொரு ஒரு தேர்விலும் இரண்டு முதல் ஐந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
![]() |
TNPSC Group 4 Tamil Notes |
ஊர்ப்பெயர்களின் மரூஉ சொற்கள்
- மயிலாப்பூர் - மயிலை
- வண்ணாரப்பேட்டை - வண்ணை
- பூவிருந்தவல்லி - பூந்தமல்லி
- சைதாப்பேட்டை - சைதை
- வானவன் மாதேவி - மானாம் பதி
- மன்னார்குடி - மன்னை /மண்ணை
- நாகப்பட்டினம் - நாகை
- புதுக்கோட்டை - புதுகை
- புதுச்சேரி - புதுவை
- கும்பகோணம் - குடந்தை
- திருச்சிராப்பள்ளி - திருச்சி
- சோழநாடு - சோணாடு
- நாகப்பட்டினம் - நாகை
- உதகமண்டலம் - ஊட்டி / உதகை
- பைம்பொழில் - பம்புளி
- கோவன்புத்தூர் - கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் - கோவை
- தேவகோட்டை - தேவோட்டை
- திருநெல்வேலி - நெல்லை
- செங்கற்பட்டு - செங்கை
- திருநின்றவூர் - தின்னனூர்
- தஞ்சை - தஞ்சாவூர்
- கருவூர் - கரூர்
- கொடைக்கானல் - கோடை
- மணப்பாறை - மணவை
- விருதுநகர் - விருதை
- பரமக்குடி - பரம்பை
- சங்கரன்கோவில் - சங்கை
- அம்பாசமுத்திரம் - அம்பை
- அறந்தாங்கி - அறந்தை
- அலங்காநல்லூர் - அலங்கை
- சிங்களாந்தபுரம் - சிங்கை
- சிங்காநல்லூர் - சிங்கை
- மயிலாடு துறை - மயூரம்
- சேந்தமங்கலம் - சேந்தை
- சோழிங்கநல்லூர் - சோளிங்கர்
- திருவண்ணாமலை - அருணை
- கருந்தட்டைக்குடி - கரந்தை
- கரிவலம் வந்தநல்லூர் - கருவை
- இராமநாதபுரம் - முகவை
- நாகர் கோவில் - நாஞ்சி
- மயிலாடு துறை - மாயூரம்
- திருத்தணி - தணிகை
- வேதாரண்யம் - வேதை
- திருச்செந்தூர் - செந்தூர்/ திருச்சீரலைவாய் /அலைவாய்
- தர்மபுரி - தகடூர்
- உசிலம்பட்டி - உசிலை
- காஞ்சிபுரம் - காஞ்சி
- பாளையங்கோட்டை - பாளை
- ஸ்ரீவைகுண்டம் - ஸ்ரீவை
- ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவி
- அருப்புக்கோட்டை - அருவை
- சிதம்பரம் - தில்லை
- சேதுராயன்புத்தூர் - சேராத்து
- திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) - குருகை
- உறையூர் - உறந்தை
- திருவாரூர் - ஆரூர்
COMMENTS