TNHRCE Recruitment2026, Chennai Temple Jobs2026, HRCE Jobs TamilNadu, Thiruvottiyur TempleVacancy, Temple Jobs in Chennai, அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு 2026
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Recruitment 2026) கீழ் இயங்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Chennai Temple Jobs 2026 தேடுபவர்களுக்கான இந்த அறிய வாய்ப்பில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். HRCE Jobs Tamil Nadu அறிவிப்பின்படி, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Are you looking for the latest Government Career Opportunities in Tamil Nadu? The TNHRCE Recruitment 2026 has officially announced several lucrative vacancies at the historic Thiruvottiyur Thyagaraja Swamy Temple. This Chennai Temple Jobs 2026 notification is a golden opportunity for job seekers aiming for a stable State Government Salary and long-term career growth. The available positions, including Junior Assistant and Watchman, offer a competitive Pay Matrix Scale ranging up to ₹58,600. If you are searching for HRCE Jobs Tamil Nadu or the latest Temple Vacancy in Chennai, this recruitment drive provides an excellent entry point into the public sector. Ensure you submit your application before the 30.01.2026 deadline to secure your spot in this prestigious TNHRCE Vacancy. Don't miss out on one of the most anticipated Employment News updates of the year
பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
- காலியிடங்கள் : 2.
- கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.18,500 - 58,600 (Pay Matrix-22).
வசூல் எழுத்தர் (Collection Clerk)
- காலியிடங்கள் : 1.
- கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.18,500 - 58,600 (Pay Matrix-22).
அலுவலக உதவியாளர் (Office Assistant)
- காலியிடங்கள் : 1.
- கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.15,900 - 50,400 (Pay Matrix-17).
காவலர் (Watchman)
- காலியிடங்கள் : 4.
- கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.15,900 - 50,400 (Pay Matrix-17).
இதர தொழில்நுட்ப பணியிடம்
- காலியிடங்கள் : 1.
- கல்வித்தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து, ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் 3 ஆண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம் : அடிப்படை ஊதியம் ரூ.15,700 (Pay Matrix-16).
உதவி சுயம்பாகம் (Assistant Cook)
- காலியிடங்கள் : 1.
- கல்வித்தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து, நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- சம்பளம் : ரூ.10,000 - 31,500 (Pay Matrix-10).
முக்கிய தேதிகள் (Important Dates)
- விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் : 30.12.2025.
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30.01.2026 (மாலை 5.45 மணி வரை).
தகுதி மற்றும் நிபந்தனைகள்
1) வயது வரம்பு : 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்த வராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2) மதம் :
விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும்
இருத்தல் வேண்டும்
3) மருத்துவச்
சான்று :
அனைத்து விண்ணப்பதாரர்களும் உடல் தகுதிச் சான்று நகலை இணைக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் : மாதிரி விண்ணப்பம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
- அனுப்பும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் (Registered Post with Ack. Due) மட்டுமே அனுப்ப வேண்டும்
.
- முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி
திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை
- 600019
.
- தபால் உறை:
சென்னை மாவட்டத்தினர் ரூ. 50-க்கும், இதர மாவட்டத்தினர் ரூ. 75-க்கும் தபால் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையை இணைக்க வேண்டும்
.
- விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.01.2026 மாலை 5.45 மணி ஆகும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
இணைக்க வேண்டிய சான்றுகள்:
- கல்விச் சான்றுகள்: பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) மற்றும் மதிப்பெண் பட்டியல்.
- சாதிச் சான்றிதழ்: வட்டாட்சியரால் வழங்கப்பட்டது
. - அடையாளச் சான்று: ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்
. - மருத்துவச் சான்று: அரசு மருத்துவரிடம் பெற்ற உடல் தகுதிச் சான்று நகல்
. - சிறப்புப் பிரிவு முன்னுரிமைச் சான்று (Special Category/Priority): ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, கலப்புத் திருமணம் அல்லது முன்னாள் இராணுவத்தினர் போன்ற முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும்
. - தபால் தலை உறை: சென்னை மாவட்டத்தினர் ரூ. 50-க்கும், இதர மாவட்டத்தினர் ரூ. 75-க்கும் தபால் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறை
.


ok
ReplyDelete