Pazhamozhi Nanuru notes in tamil,pazhamozhi nanuri tnpsc notes,6th to 12th palamozhi nanooru notes pdf,tnpsc exam,tnpsc group 4 tamil notes in tamil
TNPSC Group 2 & Group 4 General Tamil New Syllabus - Pazhamozhi Naanooru (பழமொழி நானூறு New and Old Book) Important Notes
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் அலகு 7 ல் இன்னா நாற்பது (TNPSC Group 4, Group 2 General Tamil New Syllabus Pazhamozhi Naanooru New and Old School Book Important Notes) என்ற பகுதிக்கு 6 ஆம் வகுப்பு பழைய பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள பழமொழி நானூறு மற்றும் 7 ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் உள்ள பழமொழி நானூறு ஆகியவற்றின் நோட்ஸ், பள்ளிப் புத்தக வினாக்கள் மற்றும் அதற்கான விடைகள், பழமொழி நானூறு நூல்வெளி, மேற்கோள்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் தொகுத்து ஒரே PDF Notes ஆக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நோட்ஸ் மற்றும் புத்தக வினாக்கள் மற்றும் விடைகள், கூடுதல் தகவல்கள், பழைய வினாக்கள் மற்றும் விடைகள் தொகுத்து தங்களுக்கு இந்த இணையதளத்தில் வழங்கப்படும்.
7th Tamil New Book - பழமொழி நானூறு Notes
பாடல்
சொல்லும் பொருளும்
- மாரி - மழை
- மடமகள் - இளமகள்
- வறந்திருந்த - வறண்டிருந்த
- நல்கினாள் - கொடுத்தாள்
- புகாவாக - உணவாக
- முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) - இங்கு வீட்டைக் குறிக்கிறது.
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
- இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி "ஒன்றுறா முன்றிலோ இல்" என்பதாகும்.
- இதன் பொருள் - ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை.
- பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும்.
நூல் வெளி (Box Important Notes)
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
- இவர் கி.பி. (பொ.ஆ) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
- பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் எற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
- இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது
Book Back Questions and Answer
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மரம் வளர்த்தால் ____ பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
விடை : ஆ) மாரி
2. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
விடை : இ) நீர் + உலையில்
3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
விடை : அ) மாரியொன்று
குறுவினா
1) பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
விடை : அங்கவை, சங்கவை என்போர் பாரியின் மகள்களாவர்.
2) பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு ?
விடை : பாரி மகளிர் உலை நீரில் பொன் இட்டுத் தந்ததால் பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை என்பது புலனாகிறது.
6th Tamil Old Book - பழமொழி நானூறு Notes
பாடல்
பாடல் பொருள்
கற்கவேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.
சொல்பொருள்
- ஆற்றவும் - நிறைவாக;
- நாற்றிசை - நான்கு + திகை
- தமவேயாம் - தம்முடைய நாடுகளே
- ஆற்றுணா -ஆறு + உணா ;
- ஆறு - வழி
- உணா - உணவு (வழிநடை உணவு). இதனைக் கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
- எந்நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர் என்பது பாடல் உணர்த்தும் கருத்து.
ஆசிரியர் குறிப்பு
- இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.
- முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
- அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும்.
- இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.
- நானூறு (400) பாடல்களைக் கொண்ட நூல் இது.
- இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்ற உள்ளது.
- இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது.
- இதற்குக் "கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா என்பது பொருள்.
மேற்கோள்
- அணியெல்லாம் ஆடையின் பின்
- கடன் கொண்டும் செய்வார் கடன்
- கற்றலின் கேட்டலே நன்று
- குன்றின் மேல் இட்ட விளக்கு
- தனிமரம் காடாதல் இல்
- திங்களை நாய்க் குரைத் தற்று
- நுணலும் தன் வாயால் கெடும்
கூடுதல் தகவல்கள்
நூல் பகுப்பு முறை
• இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34.
• பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்).
• பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்).
• பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்).
• பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்).
• பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்).
COMMENTS