tnpsc 11th, 12th ethics book back answers pdf download in tamil,tnpsc gk,11th ethics answers,tnpsc group 2 unit 8 important notes,tamil culture notes
Unit 8 Tamilnadu History and Culture - Important Questions and Answers
Unit 1 Ethics Book Back Answers |
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள் ( 100 % Correct Answers with Proof ).
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்கள் மற்றும் விடைகள் Tnpsc Unit 8 Tamilnadu History and it's Culture பகுதியோடு தொடர்புடையவை.
Unit 1 Tamil Culture Book Back Answers & Unit 8 Important Questions and Answers
1) 'பண்பாடு' என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் _____________
A) இளங்கோவடிகள்
B) டி.கே சிதம்பரனார்
C) தொல்காப்பியர்
D) வ.உ சிதம்பரனார்
Answer :- B) டி.கே சிதம்பரனார்
Note :- "பண்படு" என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியது "பண்பாடு" ஆகும். பண்படு என்பதற்கு சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல் என்று பொருள்.
நிலம் - சிறுபொழுது
A) குறிஞ்சி - யாமம்
B) முல்லை - மாலை
C) மருதம் - வைகறை
D) பாலை - ஏற்பாடு
Answer :- D) பாலை - ஏற்பாடு
Note :-
நிலம் - சிறுபொழுதுA) குறிஞ்சி - யாமம்
B) முல்லை - மாலை
C) மருதம் - வைகறை
D) நெய்தல் - ஏற்பாடு
E) பாலை - நண்பகல்
3) கீழ்க்காண்பனவற்றுள் சரியாக பொருந்தி உள்ள இணையை தேர்ந்தெடுக்க.
A) பாரி - முல்லைக்கு தேர் ஈந்தவர்.
B) பேகன் - ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவர்.
C) ஆய் அண்டிரன் - மயிலுக்குப் போர்வை தந்தவர்.
D) அதியமான் - நீல நாகத்தின் ஆடையை இறைவனுக்கு அணிவித்தார்.
Answer :- A) பாரி - முல்லைக்கு தேர் ஈந்தவர்
Note :-
- பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவர்.
- பாரி - முல்லைக் கொடி படர்வதற்கு தம் தேரையே தந்தவர்.
- திருமுடிக்காரி - குதிரைகளை பரிசாக வழங்கியவர்.
- ஆய் அண்டிரன் - நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்தவன்.
- அதியமான் - அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்.
- நள்ளி - மலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கியவர்.
- வல்வில் ஓரி - யாழ் மீட்டும் வீரர்களுக்கு பரிசு வழங்கியவர்.
4) பொருத்துக
அ) தொண்டி - முஸிரிஸ்
ஆ) முசிறி - கொமாரி
இ) பொற்காடு - திண்டிஸ்
ஈ) குமரி - பகரி
A) அ-3 ஆ-2 இ-1 ஈ-4
B) அ-3 ஆ-1 இ-4 ஈ-2
C) அ-4 ஆ-1 இ-2 ஈ-3
D) அ-2 ஆ-3 இ-4 ஈ-1
Answer :- B) அ-3 ஆ-1 இ-4 ஈ-2
Note :- பிற துறைமுக பெயர்கள்
- கொற்கை - கொல்சாய்
- நாகப்பட்டினம் - நிகாமா
- காவிரிப்பூம்பட்டினம் - கமரா
- புதுச்சேரி - பொதுகே
- மரக்காணம் - சோபட்மா
- மசூலிப்பட்டினம் - மசோலியா
5) கி.மு (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்
A) ஜி.யு. போப்
B) ஸ்டிராபோ
C) அகஸ்டின்
D) ஹிப்பாகிரேட்டஸ்
Answer :- D) ஹிப்பாகிரேட்டஸ்
Note :-
- கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ், "மிளகை" இந்திய மருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரோமபுரி அரசன் அகஸ்டின் சமகாலத்தவர் ஸ்டிராபோ (Strabo) ஆவார்.
- ஸ்டிராபோ எழுதிய நூல் பூகோள நூல் (Geography).
6) 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் எது
A) நற்றினை
B) குறுந்தொகை
C) கலித்தொகை
D) அகநானூறு
Answer :- C) கலித்தொகை
Note :- நல்ல வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதைப் 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.
7) பின்வரும் கூற்றையும், அதன் காரணத்தையும் படித்து விடை குறிப்பை தேர்ந்தெடுக்க
கூற்று: உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
காரணம்: நல்ல வழி முறைகளை பின்பற்றிப் பண்பாட்டில் சிறந்து விளங்குபவர்களே உயர்ந்தவர்கள்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று சரி, காரணம் சரி
C) கூற்று தவறு, காரணமும் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
Answer :- B) கூற்று சரி, காரணம் சரி
Note :- "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இங்கு உயர்ந்தோர் என்பது பண்பு உடையவர்களையே குறிக்கிறது.
8) பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை
A) 5
B) 7
C) 9
D) 10
Answer :- A) 5
Note :- ஆற்றுப்படை நூல்கள்
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
9) பொன், செம்பு ஆகிய உலோகங்கள் மீது பொறிக்கப்படுகின்ற எழுத்துக்கள்
A) ஓலைச்சுவடிகள்
B) பட்டயங்கள்
C) செப்பேடுகள்
D) சாசனங்கள்
Answer :- B) பட்டயங்கள்
Note :- பட்டயங்கள் அரசனின் பெயர், அவனது காலம், பட்டயம் அளிக்கப்படும் நோக்கம் முதலியவற்றைப் பற்றி கூறுகிறது.
10) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
A) தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை பன்னிரண்டு.
B) புறத்தார் யாவருக்கும் புறப்படும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது புறத்திணை.
C) மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலியவற்றை சிறப்பித்துப்பாடுவது வாகைத்திணை.
D) பொருந்தாக் காதலை பெருந்திணை என்று கூறுவர்
A) 2, 4 சரி
B) 1, 3 சரி
C) 2, 3சரி
D) அனைத்தும் சரி
Answer :- A) 2, 4 சரி
Note :-
- தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை 7.
- மன்னனின் வீரம் கொடை புகழ் முதலியவற்றை சிறப்பித்து பாடுவது பாடாண் திணை.
11) சோழர்காலக் கிராம ஆட்சி முறையைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு
A) மண்டகப்பட்டு
B) தளவானூர்
C) மாமண்டூர்
D) உத்திரமேரூர்
Answer :- D) உத்திரமேரூர்
Note :- பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு, சோழர் கால கிராம ஆட்சி முறையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
COMMENTS