TNPSC nanmanikkatigai,tnpsc exam,tnpsc group 4 tamil notes,6th nanmanikadigai old book notes,group 4 tamil newsyllabus, nanmanikadigai tnpsc notesfree
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் அலகு 7 ல் நான்மணிக்கடிகை (TNPSC Group 4, Group 2 Nanmanikadikai Important Notes) என்ற பகுதிக்கு 6 ஆம் வகுப்பு பழைய பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள நான்மணிக்கடிகை பகுதி, பள்ளிப்புத்தக வினாக்கள் மற்றும் அதற்கான விடைகள், மேற்கோள்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் தொகுத்து ஒரே PDF Notes ஆக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நோட்ஸ் மற்றும் புத்தக வினாக்கள் மற்றும் விடைகள், கூடுதல் தகவல்கள், பழைய வினாக்கள் மற்றும் விடைகள் தொகுத்து தங்களுக்கு இந்த இணையதளத்தில் வழங்கப்படும்.
In the TNPSC Exam Group 2 and Group 4 General Tamil new syllabus, Unit 7 includes an important section on Nanmanikadikai. This Nanmanikadikai PDF Notes study material has been specially prepared for TNPSC aspirants and includes the Nanmanikadikai portion from the 6th standard old Tamil textbook. It also features school textbook book back questions and answers, TNPSC Exam Group 2 and Group 4 model questions, TNPSC Tamil Previous Year Questions, TNPSC Nanmanikadikai previous year question and answers, tnpsc nanmanikadikai free online test and important literary references from Nanmanikadikai.
This content is highly useful for those preparing for TNPSC Exam General Tamil (New Syllabus), especially literary topics. The PDF includes a complete comparison of old and new syllabus Nanmanikadikai portions, helping candidates get a deep understanding of the text. With additional reference notes, quotes, and explanations, this is a valuable free TNPSC Tamil study material PDF for anyone focusing on Group 2 and Group 4 exams. Download this Nanmanikadikai Important Notes PDF for TNPSC preparation and boost your chances of success in the exam.
பாடல்
பாடல் பொருள்
குடும்பத்தின் விளக்குப் பெண்ணாவாள். அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. அக்கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
Short Notes :
- குடும்பத்தின் விளக்கு - பெண்
- பெண்ணுக்கு விளக்கு - பண்பில் சிறந்த பிள்ளைகள்
- பிள்ளைகளுக்கு விளக்கு - கல்வி
- கல்விக்கு விளக்கு - அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
சொல்பொருள் (Important)
- மடவார் - பெண்கள்
- தகைசால் - பண்பில் சிறந்த
- மனக்கினிய - மனத்துக்கு இனிய
- காதல் புதல்வர் - அன்புமக்கள்
- ஒதின் - எதுவென்று சொல்லும்போது
- புகழ்சால் - புகழைத் தரும்
- உணர்வு - நல்லெண்ணம்
ஆசிரியர் குறிப்பு
- நூலாசிரியரின் பெயர் - விளம்பி நாகனார்.
- விளம்பி என்பது ஊர்ப்பெயர்.
- நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு
- நான்மணிக்கடிகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
- நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
- ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.
- பாடல்கள் = 2 + 104
- பாவகை = வெண்பா
- நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
- கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை.
- நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
- நான்மணிகள் முத்து பவளம் மரகதம், மாணிக்கம்
கடவுள் வாழ்த்து
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
புத்தக வினாக்கள் மற்றும் விடைகள்
பொருள் எழுதுக
1. மடவார் - பெண்கள்
2. மனக்கினிய - மனத்துக்கு இனிய
3. உணர்வு - நல்லெண்ணம்
கோடிட்ட இடத்தை நிரப்புக
விடை : பதினெண் கீழ்க்கணக்கு நூல்
2. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் _________.
விடை : விளம்பி நாகனார்
3. மனைக்கு விளக்கம் _________.
விடை : மடவார்
4.அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்கு _________.
விடை : கல்வி
கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக
1. கடிகை என்பதன் பொருள்.
அ) கடித்தல்
ஆ) அணிகலன்
இ) கடுகு
விடை : ஆ) அணிகலன்
2. விளம்பி என்பது _____ பெயர்.
அ) இயற்பெயர்
ஆ) புனைபெயர்
இ) ஊர்ப்பெயர்
விடை : இ) ஊர்ப்பெயர்
குறுவினாக்கள்
1. நான்மணிக்கடிகை என்பதன் பொருள் யாது ?
விடை : நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
2. பெண்ணுக்கு விளக்காக அமைபவர் யார் ?
விடை : பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள்.
3. கல்விக்கு விளக்காக அமைவது எது ?
விடை : கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
கூடுதல் தகவல்கள்
- கடிகை என்றால் துண்டு (பகுதி) என்று பொருள்.
- ஆபரணம், கட்டுவடம் (Neckless) என்ற பொருளும் உண்டு.
- ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துகள் கூறப் பட்டுள்ளன.
- ஆசிரியர் : விளம்பிநாகனார் - வைணவர்
- காலம் : 4 ஆம் நூற்றாண்டு
- மொத்த பாடல்கள் : 104 பாடல்கள்
- ஜி.யு. போப் இரண்டு (7, 100) பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
- கீழ்கணக்கு நூல்களில் 2 கடவுள் வாழ்த்து கொண்ட ஓரே நூல்.
- பழைய உரையாசிரியர் - பேராசிரியர் நச்சினார்கினியார்
- உரையாசிரியர் - பாலசுந்தரம் பிள்ளை
முக்கிய பாடல் வரிகள் (மேற்கொள்கள்)
- "யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"
- "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது வேண்டின் வெகுளிவிடல்"
- "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வனமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்"
- "ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்"
- "கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர் இல்"
- "நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும் குணத்துக்கு அணி தாமரை பெண்ணுக்கு அணி நாணம்"
COMMENTS