tnpsc group 2 current afffairs, tnpsc daily current affairs,tnpsc portal current affairs,tnpsc group 4 imporatant current affairs,december 1 caintamil
TNPSC Group 1, Group 2 & 2a, Group 4 – Current Affairs Questions & Answers
TNPSC, TET, TRB, POLICE (SI & PC), RAILWAYS போன்ற அனைத்து போட்டி தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளை தினமும் படிப்பதன் மூலம் எளிமையாக விடை அளித்து விடலாம்.
December 2 - Daily Current Affairs |
தினமணி மற்றும் தினஇந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் இதை படித்தால் மட்டும் போதும், எளிமையாக விடை அளித்து விடலாம்.
நமது இணைய தளத்தில் (www.tnpscgk.com) தினமும் நடப்பு நிகவுகள் மற்றும் இலவச தேர்வுகள் வழங்கப்படுகிறது.
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
டிசம்பர் 2 :- நடப்பு நிகழ்வுகள் ( தி இந்து + தினமணி )
முக்கிய தினம் :
எல்லை பாதுகாப்பு படை தினம் (BSF): டிசம்பர் 01
- டிசம்பர் 01, 1965 உருவாக்கம்
International Day for the Abolition of Slavery : December 2
- அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- 1986 (UNGA) முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
1) தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A. டிசம்பர் 01
B. டிசம்பர் 02
C. டிசம்பர் 03
D. டிசம்பர் 04
Answer : B. டிசம்பர் 02
Notes :
- National Pollution Control Day 2021: December 02
- போபால் விஷவாயு சம்பவம் (டிசம்பர் 2-3,1984)
- எரிவாயு : மெதில் ஐசோசயநேட் (Methyl Isocyanate)
- '37 வது தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாள்' - 2 December 2021
2) நாகாலாந்து மாநிலமானது டிசம்பர் 01, 2021 இல் எத்தனையாவது தனது மாநில தினமாக கொண்டாடியது ?
A. 60-வது
B. 57-வது
C. 58-வது
D. 59-வது
Answer : D. 59-வது
Notes :
- Nagaland celebrates its 59th Statehood Day.
- உருவாக்கம் : டிசம்பர் 01, 1963
- தலைநகரம் : கோஹிமா
- ஆளுநர் : ஜெகதீஷ் முகி (Jagdish Mukhi)
- முதல்வர் : நெய்பியு ரியோ (Neiphiu Rio)
தமிழ்நாடு :
3) 2022 பிப்ரவரியில் தமிழகத்தில் வெப்ப காற்று பலூன் திருவிழாவை நடத்த தமிழக அரசின் எந்தத் துறை திட்டமிட்டுள்ளது ?
A. சுற்றுலாத் துறை
B. தொழில்துறை
C. போக்குவரத்து துறை
D. தகவல் தொழில்நுட்பத்துறை
Answer : A. சுற்றுலாத் துறை
4) தமிழகத்தின் பின்வரும் எந்த மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் புதிய கல்லூரிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன ?
1. மதுரை
2. திருச்சி
3. திண்டுக்கல்
4. தூத்துக்குடி
5. நாமக்கல்
A. 1,2,மற்றும் 4
B. 2,3 மற்றும் 4
C. 3, 4 மற்றும் 5
D. மேற்கண்ட அனைத்தும்
Answer : C. 3, 4 மற்றும் 5
இந்தியா :
5) ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021' க்கு குடியரசு தலைவர் எப்போது ஒப்புதல் அளித்துள்ளார் ?
A. நவம்பர் 29,2021
B. டிசம்பர் 02,2021
C. டிசம்பர் 01,2021
D. நவம்பர் 19,2021
Answer : C. டிசம்பர் 01,2021
Notes :
- President approves Farm Laws Repeal Bill-2021.
- 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா - குடியரசு தலைவர் ஒப்புதல்
- நவம்பர் 29 இல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
6) ‘செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப (முறைப்படுத்துதல்) மசோதா - 2020' மக்களவையில் தாக்கல் செய்தவர் யார் ?
A. நிர்மலா சீதாராமன்
B. அனுராக் சிங் தாக்குர்
C. மன்சுக் மாண்டவியா
D. நரேந்திர சிங் தோமர்
Answer : C. மன்சுக் மாண்டவியா
Notes :
- Lok Sabha passes bill to regulate assisted reproductive technology services
- மத்திய சுகாதார துறை அமைச்சர் - C. மன்சுக் மாண்டவியா
- மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் (டிசம்பர் 1).
- செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பத்தை (ART) முறைப்படுத்தும் சட்ட மசோதா'
7) ஹைட்ரஜன் ஆற்றல் குறித்த முதலாவது சர்வதேச மாநாடு கீழ்க்கண்ட எந்த நகரில் நடைபெற்றது ?
A. புது தில்லி
B. கோவா
C. இந்தூர்
D. கொல்கத்தா
Answer : A. புது தில்லி
Notes :
- 1st International Conference Hydrogen Energy - Polices
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் பக்வந்த் கூபா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச நிகழ்வுகள் :
8) மெக்சிகோ நாட்டில் எத்தனையாவது 'சர்வதேச பலூன் கண்காட்சி’ அண்மையில் நடைபெற்றது ?
A.18-வது
B. 20-வது
C. 21-வது
D. 25-வது
Answer : B. 20-வது
Notes :
- 20th International Balloon Exhibition - Mexico
- தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மா. மதிவேந்தன் - பங்கேற்பு
9) உலகின் முதல் ‘மிதக்கும் நகரம்’ கீழ்க்கண்ட எந்த நாட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது ?
A. ஆஸ்திரேலியா
B. மலேசியா
C. நார்வே
D. தென் கொரியா
Answer :
Notes :
- World's firs, floating city's being built in Busan
- தென்கொரியாவில் உள்ள பூசன் கடறகரை அருகில், 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்.
- ஐ.நா. வின் மனித குடியேற்றத் திட்டம் மற்றும் OCEANX - கூட்டு முயற்சியின் கீழ் இந்நகரம் உருவாக்கப்படுகிறது.
விளையாட்டு :
10) தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியனஷிப் போட்டி கீழ்க்கண்ட எந்த நகரில் நடைபெற உள்ளது ?
A. புது தில்லி
B. புனே
C. போபால்
D. கொல்கத்தா
Answer : B. புனே
Notes :
- Hockey: Senior Men's National Championship - புனே, மஹாராஷ்டிரா (டிசம்பர் 11) - தொடக்கம்.
- இது, 11-வது பதிப்பு ஆகும்.
- தமிழகம் உள்பட 30 அணிகள் - பங்கேற்பு.
December 2021 Current Affairs :
COMMENTS