Tnpsc 10th economics book back answers in tamil,10th social science book back answers guide in tamil,tnpsc gk,group 4 geography study material,tnpscgk
TNPSC Indian Geography topic is very important to get 8 to 15 Marks in TNPSC Group 2, Group 2A, Group 4, Group 1, CCSE 4, CCSE 2. The samacheer books are only the best books for TNPSC Geography topic preparation. Here we will provided 10th Geography Book Back Answer in Tamil PDF. In our website all samacheer book back question answers are available with explanation. Here we have given TN State Board New Syllabus Samacheer 10th Social Science Guide PDF of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Important Notes. 10th Social Science Geography Chapter 1 India Location, Relief and Drainage Book Back Answer in Tamil.
![]() |
TNPSC 10th Geography Unit 1 Book Back Answer in Tamil |
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள புவியியல் பகுதியில் இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு என்ற பாடத்திற்கான புத்தக வினாக்களுக்கான விடைகள் மற்றும் விடைகளுக்கான கூடுதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
Answer : ஆ) 2933 கி.மீ
Note :
i) காஷ்மீரிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை - 3214 km நீளம்.
ii) மேற்கே குஜராத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை - 2933 km நீளம்.
iii) 23°30’ வட அட்சமான கடகரேகை - இந்தியாவின் தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
2. இந்தியாவின் தென்கோடி முனை
அ) அந்தமான்
ஆ) கன்னியாகுமரி
இ) இந்திராமுனை
ஈ) காவரட்தி
Answer : இ) இந்திராமுனை
Note :
i) இந்தியாவின் தென்கோடி முனை - இந்திரா முனை அல்லது பிக்மெலியன் முனை (அந்தமான் நிகோபர் தீவு).
ii) இந்திய நிலப்பகுதியின் தென்கோடி - குமரி முனை.
iii) இந்தியாவின் வடமுனை - இந்திரா கோல் (ஜம்மு காஷ்மீர்).
3. இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்
அ) 2500 கி.மீ
ஆ) 2400 கி.மீ
இ) 800 கி.மீ
ஈ) 2200 கி.மீ
Answer : அ) 2500 கி.மீ
Note :
i) மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை - 2500 km நீளம்.
ii) இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500கி.மீ அகலத்துடனுன், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கி.மீ அகலத்துடனும் வேறுபடுகிறது.
4. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
Answer : இ) கோசி
Note :
i) நர்மதை
- உற்பத்தி : மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமி நீளம் : 1312 km
- மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானது.
ii) கோதாவரி( வேறு பெயர் : விருத்தகங்கா)
- உற்பத்தி : மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை.
- தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு.
- நீளம் : 1465 km
iii) மேற்கு வங்காளத்தின் துயரம் - தாமோதர் ஆறு.
iv) பீகாரின் துயரம் - கோசி ஆறு.
5. தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________சதுர கி.மீ ஆகும்.
அ) 6 லட்சம்
ஆ) 8 லட்சம்
இ) 5 லட்சம்
ஈ) 7 லட்சம்
Answer : ஈ) 7 லட்சம்
Note :
i) தீபகற்ப பீடபூமிகள்
- பரப்பளவு - 16 லட்சம் சதுர கி.மீ.
- நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் பாதியாகும்.
- இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவு.
ii) நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது.
- வடபகுதி - மத்திய உயர்நிலங்கள்.
- தென்பகுதி - தக்கான பீடபூமி.
iii) தக்காண பீடபூமி வடிவம் - முக்கோண வடிவம்
6. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
Answer : ஈ) நீர்ச்சந்தி
7. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) ஸ்ரீலங்கா
ஈ) மாலத்தீவு
Answer : இ) ஸ்ரீலங்கா
8. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________.
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
Answer : ஆ) ஆனை முடி
Note :
i) ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் - குருசிகார் (1722 மீ).
ii) மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி - சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
iii) கிழக்குத் தொடர்ச்சி மலை - பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.
9. பழைய வண்டல் படிவுகளால் உருவானசமவெளி ___________.
அ) பாபர்
அ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
Answer : இ) பாங்கர்
Note :
புதிய வண்டல் மண் - காதர் (அ) பெட் நிலம் (betland)
10. பழவேற்காடு ஏரி ___________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
Answer : ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
Note :
i) இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி - சிலிகா ஏரி.
ii) கொல்லேறு ஏரி - கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது.
II. பொருத்துக
1. சாங்போ - கங்கை ஆற்றின் துணை ஆறு
2. யமுனை - இந்தியாவின் உயர்ந்த சிகரம்
3. புதிய வண்டல் படிவுகள் - பிரம்மபுத்ரா
4. காட்வின் ஆஸ்டின் (K2) - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
5. சோழ மண்டலக்கடற்கரை - காதர்
Answer :
1. சாங்போ - பிரம்மபுத்ரா
2. யமுனை - கங்கை ஆற்றின் துணை ஆறு
3. புதிய வண்டல் படிவுகள் - காதர்
4. காட்வின் ஆஸ்டின் (K2) - இந்தியாவின் உயர்ந்த சிகரம்
5. சோழ மண்டலக்கடற்கரை - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
III. கண்டறிக
1) மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள யூனியன் பிரதேசங்கள்
Answer :
I) மேற்கு கடற்கரை
- தாத்ரா நாகர் வேலி & டாமன் டையூ
- லட்சத்தீவு
II) கிழக்கு கடற்கரை
- புதுச்சேரி
- அந்தமான் நிக்கோபார் தீவு
2) அதிகம் மற்றும் குறைந்த பரப்பளவு உள்ள மாநிலங்கள்
Answer :
- அதிகம் பரப்பளவு உள்ள மாநிலம் - ராஜஸ்தான்
- குறைந்த பரப்பளவு உள்ள மாநிலம் - கோவா
3) சர்வதேச எல்லைகளைக் கொண்டிராத மாநிலங்கள் அருகிலுள்ள மாநிலங்கள்
Answer :
- ஹரியானா
- மத்தியப் பிரதேசம்
- ஜார்க்கண்ட்
- சத்தீஸ்கர்
- தெலுங்கானா
- யூனியன் பிரதேசங்கள் - சண்டிகர் மற்றும் டெல்லி
4) பாகிஸ்தான், சீனா, மியான்மர் மற்றும் வங்காளதேசம் நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பெயர்களை பட்டியலிடு
Answer :
- பாகிஸ்தான் : ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்.
- சீனா : ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்.
- மியான்மர் : அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம்.
- வங்களாதேஷ் : பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அசாம், மேகாலயா, திரிபுரா.
5) இமய மலைத்தொடரில் உள்ள கோடை வாழ்விடங்களை கண்டறிக
Answer : சிம்லா, முசொரி, நைனிடால், அல்மோரா. ராணிக்கேத், டார்ஜிலிங் மற்றும் குலு மணாலி.
6) எந்த ஆற்றில் (ஜெர்சப்பா)ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது
Answer : சராவதி ஆறு(கர்நாடகா)
IV. Important Notes
1) இந்தியா - 6 இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- வடக்கு மலைகள்
- வடபெரும் சமவெளிகள்
- தீபகற்ப பீடபூமிகள்
- இந்தியப் பாலைவனம்
- கடற்கரைச் சமவெளிகள்
- தீவுகள்
2) வடக்கும் மலைகள் - 3 பிரிவுகள்.
- பிரான்ஸ் இமயமலை
- இமயமலை
- பூர்வாஞ்சல் அல்லது கிழக்கு இமயமலை
3) வட பெரும் சமவெளிகள் - 4 பிரிவுகள்.
- இராஜஸ்தான் சமவெளி
- பஞ்சாப் ஹரியானா சமவெளி
- கங்கை சமவெளி
- பிரம்மபுத்ரா சமவெளி
4) தீபகற்ப பீடபூமி - 2 பிரிவுகள்.
- மத்திய உயர் நிலம்
- தக்காண பீடபூமி
5) தீவுகள் - 2 பிரிவுகள்.
- அந்தமான் நிக்கோபார் தீவு
- லட்சத்தீவு
6) இந்திய வடிகாலமைப்பு - 2 பிரிவுகள்.
- வட இந்திய ஆறுகள் (இமயமலை ஆறுகள்)
- தீபகற்ப ஆறுகள்
7) வற்றாத ஆறுகள்
- சிந்து
- கங்கை
- பிரம்மபுத்திரா
8) அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள்
- நர்மதா
- தபதி
- மாகி
- சமர்மதி
9) கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள்
- மகாநதி
- கோதாவரி
- கிருஷ்ணா
- காவிரி
V. கலைச் சொற்கள்
- காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Back waters): ஆற்றின் முகத்துவாரத்தில் ஆற்றுநீர் கடல் அலைகளால் தடுக்கப்பட்டு கடலில் கலக்காமல் தேங்கி இருப்பது.
- கிளை ஆறு (Distributary): முதன்மை ஆறானது அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலப்பது.
- ஆற்றிடைச் சமவெளி (Doab): இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான சமவெளி.
- கழிமுகம் (Estuary): ஆறு அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரியாமல் ஒரே ஆறாக கடலில் கலக்கும் பகுதி.
- வற்றாத ஆறுகள் (Perennial Rivers): ஆறுகள் ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடனும் நிலையான நீர் பிடிப்பு பகுதியையும் கொண்டிருப்பது.
- கணவாய் (Pass): இரு மலைத்தொடர்களின் ஊடாகசெல்லும் குறுகிய பாதை.
- தீபகற்பம் (Peninsula): மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி.
- துணைக்கண்டம் (Subcontinent): ஒரு கண்டத்திற்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள மிகபரந்த நிலப்பரப்பு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
- திட்ட நேரம் (Standard Time): ஒரு நாட்டின் மைய தீர்க்கத்தின் தலநேரத்தை திட்ட நேரம் என்கிறோம்.
- துணையாறு (Tributary): ஒரு சிற்றோடை அல்லது ஆறானது முதன்மை ஆற்றுடன் ஒன்று சேர்வது.
VI. காரணம் கூறுக
1. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
Answer : இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும். ஏனெனில் இம்மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார்தான் உருவாகியவை.
- மேலும் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு, மடிப்பு மலைகளாக உருவாகின.
2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்
Answer : சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா வட இந்தியாவில் பாய்கின்றன. வடக்கே உள்ள இமய மலையில் இந்த ஆறுகள் உற்பத்தியாவதால் இமயமலை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள் ஆகும்.
3. சோட்டா நாகபுரி பீடபூமி கனிமவளம் நிறைந்தது.
Answer : சோட்டாநாகபுரி பீடபூமி மத்திய உயர் நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பீடபூமி ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் பகுதி, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதி இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளத்திற்கு புகழ் பெற்றது.
4. இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.
Answer : சமஸ்கிருதத்தில் மருஸ்தாலி என்றால் ‘இறந்த நிலம்’ என்று பொருள். இது கடுமையான வறண்ட காலநிலை மற்றும் மிகக் குறைந்த தாவரங்களைக் கொண்ட உண்மையான பாலைவனத்தின் பகுதி. இந்த பிராந்தியத்தில் பல்வேறு வகையான மணல் திட்டுகள் உள்ளன.
5. வடக்கு கிழக்கு மாநிலங்கள் “ஏழுசகோதரிகள்” என அழைக்கப்படுகின்றன.
Answer : மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை அசாமில் உள்ள பாசக் கிராமம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் 1972 இல் ஏழு சகோதரிகளாக பெயரிடப்பட்டன.
6. கோதாவரி ஆறு விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது.
Answer : “விருதா” என்றால் பழையது. இது இந்தியாவின் இயற்பியல் பிரிவுகளில் மிகப் பழமையான தீபகற்ப பீடபூமி வழியாக உருவாகிறது. கங்கை நதியைப் போலவே, கோதாவரியும் தீபகற்ப நதிகளில் 3.13 லட்சம் கி.மீ பரப்பளவு கொண்டது. எனவே இந்த நதி பெரும்பாலும் “விருதா கங்கை” என்று அழைக்கப்படுகிறது.
TNPSC Geography Important One Line Question
10th Geography - Important Questions and Answers in Tamil
Unit 1 - இந்தியா அமைவிடம் நிலத் தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
Unit 2 - இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்.
Good method...
ReplyDeleteThank you..
ReplyDelete