9th economics book back answers,6th to 10th book back answers in tamil,tnpsc economics book back answers,tnpsc gk,group 2 economics syllabus,group 4
9th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
மூன்றாம் பருவம் (III) - Unit 1 தமிழ்நாடு வேளாண்மை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
9th Economics Term 3 - Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
அ) 27%
ஆ) 57%
இ) 28%
ஈ) 49%
Answer :- ஆ) 57%
2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது ?
அ) கம்பு
ஆ) கேழ்வரகு
இ) சோளம்
ஈ) தென்னை
Answer :- ஈ) தென்னை
3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
அ) 3,039 கி.கி
ஆ) 4,429 கி.கி
இ) 2,775 கி.கி
ஈ) 3,519 கி.கி
Answer :- ஆ) 4,429 கி.கி
4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
அ) குறைந்துள்ளது
ஆ) எதிர்மறையாக உள்ளது
இ) நிலையாக உள்ளது
ஈ) அதிகரித்துள்ளது
Answer :- ஈ) அதிகரித்துள்ளது
5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைபொழியும் மாதங்கள்
அ) ஆகஸ்டு – அக்டோபர்
ஆ) செப்டம்பர் – நவம்பர்
இ) அக்டோபர் – டிசம்பர்
ஈ) நவம்பர் – ஜனவரி
Answer :- இ) அக்டோபர் – டிசம்பர்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் _______________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.
Answer :- வேளாண் தொழிலையே
2. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது _______________ பருவ மழையாகும்.
Answer :- வடகிழக்குப் பருவ மழை (அக்டோர் – டிசம்பர்)
3. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ____________ ஹெக்டேர்கள் ஆகும்.
Answer :- ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம்
III) பொருத்துக
1. உணவல்லாத - 79,38,000 பயிர்கள்
2. பருப்பு வகைகள் - ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்
3. வடகிழக்குப் - அக்டோபர் – டிசம்பர் பருவமழை
4. குறு விவசாயிகள் - உளுந்து, துவரை, பாசிப்பயிறு
5. 2015 இல் - தென்னை
Answers :-
1. உணவல்லாத பயிர்கள் - தென்னை
2. பருப்பு வகைகள் - உளுந்து, துவரை, பாசிப்பயிறு
3. வடகிழக்குப் பருவமழை - அக்டோபர் – டிசம்பர்
4. குறு விவசாயிகள் - ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்
5. 2015 - இல் விவசாயிகளின் எண்ணிக்கை - 79,38,000
IV) Important Notes
1) தமிழ்நாடு :
- தமிழகத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை மற்றும் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகின்றது.
2) குறுவிவசாயிகளின் எண்ணிக்கை :
- இந்தியா - அளவில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- தமிழகம் - அளவில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
3) தமிழ்நாடு :-
- தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பில் எத்தனை விழுக்காடு நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது - 1 விழுக்காடு (1%)
- தரிசாக விடப்பட்டுள்ள நிலம் - நான்கில் ஒரு பகுதி நிலம் ( 1/4 பங்கு)
4) ஒரு நிலத்திற்கு நல்ல நீர் வசதி கிடைத்தால் ஓராண்டு காலத்தில் இருமுறை அல்லது மும்முறை பயிர் சாகுபடி செய்யலாம்.
5) தமிழகத்தின் வேளாண்மைக்கான நீர் ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையாகும்.
- தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளது.
6) பயிர்கள் - 2 வகைப்படும்
- உணவுப் பயிர்கள்
- உணவல்லாத பயிர்கள்
7) தமிழகத்தின் முக்கிய உணவுப்பயிர்கள்
- நெல்
- சோளம்
- கம்பு
- கேழ்வரகு
8) தென்னை - உணவல்லாத பயிர்களில் முதலிடம் வகிக்கிறது.
9) தமிழகத்தில் வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருவதை சமீபகால ஆய்வுகள் வெளிப்படுத்துக்கின்றன.
V) கலைச் சொற்கள்
- தரிசு - வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படாத நிலப்பகுதி
- உற்பத்தித்திறன் - ஒரு ஹெக்டேருக்கு விளைச்சலின் அளவு
- மணிலா - வேர்க்கடலை
- சிறுதானியங்கள் - வரகு, சாமை போன்ற தானியங்கள்
- நிலத்தடிநீர் - புவியின் நிலப்பரப்பிற்குக் கீழ் சேமிக்கப்படும் நீர்
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS