6th to 10th book back answers In tamil,9th economic book back answers in tamil,tnpsc economics book back answers,6th to 10th economics book back answe
9th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
முதல் பருவம் (I) - Unit 1 மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
9th Term 1 - Economics Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I. சரியான விடையினை தேர்வு செய்க
1. கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
காரணம்(R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answer :- அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
2. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது ?
அ) ஏழை மக்கள் மீதான முதலீடு
ஆ) வேளாண்மை மீதான செலவு
இ) சொத்துக்கள் மீதான முதலீடு
ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை
Answer :- ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை
3. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.
அ) வளர்ச்சி
ஆ) வருமானம்
இ) செலவீனம்
ஈ) சேமிப்புகள்
Answer :- ஆ) வருமானம்
4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.
அ) மொத்த நிகர உற்பத்தி
ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
இ) நிகர தேசிய உற்பத்தி
ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி
Answer :- இ) நிகர தேசிய உற்பத்தி
5. ___________ வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
அ) சராசரி
ஆ) மொத்த
இ) மக்கள்
ஈ) மாத
Answer :- அ) சராசரி
6. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) ஜப்பான்
ஆ) கனடா
இ) ரஷ்யா
ஈ) இந்தியா
Answer :- ஈ) இந்தியா
7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) இந்தியா
ஆ) பாகிஸ்தான்
இ) சீனா
ஈ) பூடான்
Answer :- இ) சீனா
8. கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.
காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answer :- அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
9. கூற்று(A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம்(R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answer :- அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
10. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை ?
அ) பாலினம்
ஆ) உடல்நலம்
இ) கல்வி
ஈ) வருமானம்
Answer :- அ) பாலினம்
11. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது ?
அ) ஆந்திரபிரதேசம்
ஆ) உத்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- இ) தமிழ்நாடு
12. பாலின விகிதம் என்பது
அ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்
ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்
இ) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு
ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
Answer :- ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது ?
அ) தொழிற்சாலை
ஆ) பொருளாதார மேம்பாடு
இ) நிலையான மேம்பாடு
ஈ) பொருளாதார வளர்ச்சி
Answer :- இ) நிலையான மேம்பாடு
14. பொருந்தாத ஒன்றை கண்டறி
அ) சூரிய ஆற்றல்
ஆ) காற்று ஆற்றல்
இ) காகிதம்
ஈ) இயற்கை வாயு
Answer :- ஈ) இயற்கை வாயு
15. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) மேற்கு வங்காளம்
இ) கேரளா
ஈ) ஆந்திரப் பிரதேசம்
Answer :- அ) தமிழ்நாடு
16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்
அ) இயற்கை
ஆ) புதுப்பிக்க இயலும்
இ) புதுப்பிக்க இயலாது
ஈ) புதியவை
Answer :- இ) புதுப்பிக்க இயலாது
17. அனல் மின் நிலையம் அதிக அளவிளான________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ) கார்பன்
ஈ) கார்பன்டைஆக்சைடு
Answer :- ஈ) கார்பன்டைஆக்சைடு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ___________ என்று அறியப்படும்.
Answer :- பொருளாதார முன்னேற்றம்
2. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ___________
Answer :- புதுடில்லி சாஸ்திரிபவன்
3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ___________
Answer :- கேரளா
4. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்___________
Answer :- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
5. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ___________
Answer :- அமர்த்தியா சென்
III. பொருத்துக
1. மேம்பாடு - வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
2. மனித வளம் - புதுப்பிக்க தக்க வளங்கள்
3. சூரிய சக்தி - தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி
4. 1972 - கல்வி
Answers :-
1. மேம்பாடு - தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி
2. மனித வளம் - கல்வி
3. சூரிய சக்தி - புதுப்பிக்க தக்க வளங்கள்
4. 1972 - வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
IV) Important Notes
1) தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம் - 2010
- நோக்கம் :- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது.
2) பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம் - 2002
- நோக்கம் :- பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல்.
3) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் - 1986
- நோக்கம் :- சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்.
4) வன (பாதுகாப்பு) சட்டம் - 1980
- நோக்கம் :- காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல்.
5) நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம் - 1974
- நோக்கம் :- அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல்.
6) வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் - 1972
- நோக்கம் :- காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
7) மனித வள மேம்பாட்டு அமைச்சகம் :- இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும்.
- தலைமையகம் :- புதுடெல்லி - சாஸ்திரி பவனில்
8) மேம்பாடு - ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
9) பொருளாதார மேம்பாடு - பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி.
10) பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள்
- நிகரநாட்டு உற்பத்தி
- தலா வருமானம்
- வாங்கும் திறன் சமநிலை
- மனித வளர்ச்சிக் குறியீடு
எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளங்கள் அவசியமாகும்.
11) நிலையான பொருளாதார மேம்பாடு - தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றத்தைச் சேதப்படுத்தாமல் செயல்பட வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
12) அனல் மின் நிலையம் - சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு கார்பன்-டை ஆக்சைடை வெளியேற்றிச் சூழலை மாசுபடுத்துகிறது.
V) கலைச்சொற்கள்
- உள்ளடக்குதல் - உள்ளே
- நிரப்பவும் - மீட்க
- பார்வை - கண்ணோட்டம்
- நிலைத்த தன்மை - பற்றாக்குறை
- தவிர்க்கப்படுதல்
- சிதைவு - வெற்றிடம்
- சேமிக்க - பாதுகாக்க
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
Part-1. Question number 17 answer?
ReplyDeleteஈ) கார்பன்டைஆக்சைடு
ReplyDelete