6th to 10th book back answers in tamil,9th economics book back answers,tnpsc economics book back answers,group 2 economics notes,group 4 economics,gk
9th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
இரண்டாம் பருவம் (II) - Unit 1 பணம் மற்றும் கடன்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
9th Economics Term 2 - Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும். |
I) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் _________
(தங்கம் / இரும்பு)
Answer :- தங்கம்
2. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் _________
(சென்னை / மும்பை)
Answer :- மும்பை
3. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________
(அமெரிக்க டாலர் / பவுண்டு)
Answer :- அமெரிக்க டாலர்
4. ஜப்பான் நாட்டின் பணம் _________என்று அழைக்கப்படுகிறது .
(யென்/ யுவான்)
Answer :- யென்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _________ வணிகத்தின் முதல் வடிவம்.
Answer :- பண்டமாற்று முறை
2. பண விநியோகம் _________ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
Answer :- 4 பிரிவுகள்
3. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் _________
Answer :- நாசிக் (1925)
4. பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு _________ க்கு உள்ளது.
Answer :- ரிசர்வ் வங்கி
5. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை _________
Answer :- ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the rupee and its Solution)
III) பொருத்துக
1. அமெரிக்க டாலர் - தானியங்கி இயந்திரம்
2. நாணய சுழற்சி - பணத்தின் மாற்று
3. ஏ.டி.எம் - சர்வதேச அங்கீகாரம்
4. உப்பு - சவுதி அரேபியா
5. ரியால் - 85%
Answers :-
1. அமெரிக்க டாலர் - சர்வதேச அங்கீகாரம்
2. நாணய சுழற்சி - 85%
3. ஏ.டி.எம் - தானியங்கி இயந்திரம்
4. உப்பு - பணத்தின் மாற்று
5. ரியால் - சவுதி அரேபியா
IV) சரியானக் கூற்றை எழுதுக.
அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்
i) 1 சரி, 2 தவறு
ii) இரண்டும் சரி
iii) இரண்டும் தவறு
iv) 1 தவறு, 2 சரி
Answer :- ii) இரண்டும் சரி
ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.
i) இரண்டு கூற்றுகளும் சரி
ii) இரண்டு கூற்றுகளும் தவறு
iii) 1 சரி, 2 தவறு
iv) 1 தவறு, 2 சரி
Answer :- iii) 1 சரி, 2 தவறு
V) Important Notes
- இந்தியா - ரூபாய்
- பாகிஸ்தான் - ரூபாய்
- இலங்கை - ரூபாய்
- இங்கிலாந்து - பவுண்டு
- ஐரோப்பிய ஒன்றியம் - யூரோ
- கனடா - டாலர்
- ஆஸ்திரேலியா - டாலர்
- ஜப்பான் - யென்
- சீனா - யுவான்
- சவுதி அரேபியா - ரியால்
- மலேசியா - ரிங்கிட்
3) புராதனப்பணம்
- தங்கம்
- வெள்ளி
- செம்பு
4) அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்.
- மிளகு
- நறுமணப் பொருட்கள்
5) காகிதப்பணம் - உலோகப் பற்றாக்குறை காரணமாக, அறிமுகப்படுத்தப்பட்டது.
6) தானியங்கி பணம் வழங்கும் அட்டை (ATM) - ஒருவர் எந்த நேரத்திலும் தனது வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை எடுக்கலாம்.
7) தற்போது அலைபேசி மூலமும் வங்கி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
8) பணப்பரிமாற்றத்தினைப் பராமரிப்பதும் கண்காணிப்பதும் அரசின் கடமைகளாகும்.
9) இந்தியாவின் அனைத்து பெரிய மற்றும் முக்கிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
10) ஏப்ரல் 1, 1935 - இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட தொடங்கியது .
11) இந்திய ரிசர்வ் வங்கி - 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
12) பணத்திற்கும் பொருளின் விலைக்கும் இடையே நெருக்கமான தொடர்புள்ளது.
13) பணம் - ஒரு நாட்டின் பரிமாற்ற ஊடகமாகும்.
14) பணத்தின் செயல்படுகள்
- பரிமாற்ற ஊடகமாகவும்
- கணக்கு அலகாகவும்
- மதிப்பீட்டினைச் சேமிப்பதற்கும்
- பண வழங்கீட்டிற்கான தரப்படுத்தல்.
15) வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மக்களின் நிதித்தேவையினைப் பூர்த்தி செய்கின்றன.
16) வங்கிச் செயல்பாடுகள் - ரூபாய்
- பெறப்பட்ட வைப்புத் தொகை - 7.17 லட்சம் கோடி
- வழங்கப்பட்ட மொத்த கடன் - 7.84 லட்சம் கோடி
- சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் - 1.40 லட்சம் கோடி
- வேளாண்மை உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் - 3.56 லட்சம் கோடி
- நலிவடைந்தோருக்கான கடன் - 1.04 லட்சம் கோடி
- கல்விக் கடன் - 1.67 லட்சம் கோடி
- கடன் வைப்புத் தொகை விகிதம் - 109.34%
VI) கலைச் சொற்கள்
- அந்நிய செலாவணி - நாடுகளுக்கு இடையிலான பணம்
- ஏற்றுமதி - ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் விலைபொருட்கள்
- பணப்பரிமா- நபர்கள் பணத்தினைத் தரும் மற்றும் பெற்றுக் கொள்ளும் செயல்பாடு
- புராதனப் பணம் - பழங்காலப் பணம்
- மின்னணு பரிமாற்றம் - தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் பரிமாற்றம்
- வைப்புத் தொகை - குறிப்பிட்ட காலத்திற்கான வங்கிகளில் சேமிக்கப்படும் தொகைகள்
- முறைசாரா நிதி நிறுவனங்கள் - அரசுடைமையாக்கப்படாத நிதி நிறுவனங்கள்
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS