Tnpsc economics book back answers in tamil,6th to 10th economics book back answers in tamil,7th economics book back answer,group4 economics study note
7th பொருளாதாரம் புத்தக வினாக்கள் விடைகள்
மூன்றாம் பருவம் (III) - Unit 1 வரி மற்றும் அதன் முக்கியத்துவம் ஓர் அறிமுகம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகள் அனைத்தும் 100 % சரியான விடைகள்.
புதிய சமச்சீர் புத்தக பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகளின் தொகுப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தின் பொருளாதார வினாக்கள் மற்றும் விடைகள்.
![]() |
7th Term 3 Economics Book Back Answers |
அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் இலவச Online தேர்வுகள் (Free Online Test) நமது இணையதளத்தில் நடத்தப்படும்.
I) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. வரிகள் என்பவை --------- செலுத்தப்பட வேண்டும்.
அ) விருப்பத்துடன்
ஆ) கட்டாயமாக
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- ஆ) கட்டாயமாக
2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது ------
அ) சமத்துவ விதி
ஆ) உறுதிப்பாட்டு விதி
இ) சிக்கன விதி
ஈ) வசதி விதி
Answer :- இ) சிக்கன விதி
3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ------
அ) விகிதச்சாரா வரி
ஆ) தேய்வுவீத வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- ஆ) தேய்வுவீத வரி
4. வருமான வரி என்பது ------
அ) நேர்முக வரி
ஆ) மறைமுக வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer :- அ) நேர்முக வரி
5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ---------
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) விற்பனை வரி
ஈ) சேவை வரி
Answer :- ஈ) சேவை வரி
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே -------- என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
Answer :- வரி விதிப்பு
2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ---------.
Answer :- விகிதாச்சார வரி
3. ----- வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
Answer :- அன்பளிப்பு வரி
4. ------- வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
Answer :- நேர்முக வரி
5. மறைமுக வரி என்பது ------- நெகிழ்ச்சி உடையது.
Answer :- அதிக நெகிழ்ச்சி
III) பின்வருவனவற்றைப் பொருத்துக
1. வரி விதிப்புக் கொள்கை – நேர்முக வரி
2. சொத்து வரி – சரக்கு மற்றும் சேவை வரி
3. சுங்கவரி – ஆடம்ஸ்மித்
4. 01.07.2017 – குறைந்த நெகிழ்ச்சி உடையது
5. நேர்முக வரி – மறைமுக வரி
Answer :-
1. வரி விதிப்புக் கொள்கை - ஆடம்ஸ்மித்
2. சொத்து வரி - நேர்முக வரி
3. சுங்கவரி - மறைமுக வரி
4. 01.07.2017 - சரக்கு மற்றும் சேவை வரி
5. நேர்முக வரி - குறைந்த நெகிழ்ச்சி உடையது
IV) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
1. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல ?
அ) சேவை வரி
ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
இ) சொத்துவரி
ஈ. சுங்கவரி
Answer :- இ) சொத்துவரி
V) சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பின்வரும் வரியில் எது நேர்முக வரி ?
அ) சேவை வரி
அ) செல்வ வரி
இ) விற்பனை வரி
ஈ) வளர் விகித வரி
Answer :- அ) செல்வ வரி
VI) Important Notes
- வரி விதிப்பு - ஒரு வரி விதிக்கும் அதிகாரம் அதாவது அரசாங்கம் வரி விதிப்பது. # வருமானம் முதல் மூலதன ஆதாயங்கள் மற்றும் சொத்துவரி வரை அனைத்து வகையான தன்னிச்சையான வரிவிதிப்புகளும் “வரி விதிப்பு” என்ற சொல்லிற்கு பொருந்தும்.
- வரி பற்றிய அறிஞர்கள் குறிப்பு :-
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. - வரி செலுத்துவோருக்கு நேரடி (அல்லது) திரும்பப் பெறக் கூடிய வாய்ப்பு (அல்லது) நன்மை என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசாங்கத்திற்குக் கட்டாய செலுத்துகைகள் ஆகும்.
# இந்த முறையில் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் வரி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். - ஆடம் ஸ்மித் வரிவிதிப்பு கோட்பாடு - 4 வகைகள்.
i) சமத்துவ விதி, ii) உறுதிப்பாட்டு விதி, iii) சிக்கன விதி, iv) வசதி விதி - நாட்டு விவகாரங்களைச் சீராக நடத்துவதில் ஆட்சிமுறை முக்கியமான அங்கமாகும்.
- ஒரு நேர்முக வரி - அதன் சுமையை நேரடியாக சுமத்தப்படும் நபரால் சுமக்கப்படும் வரி. அதன் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
- சொத்து அல்லது பண்ணை வரி - பரம்பரைச் சொத்தின் வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவதைத் தவிர்ப்பது விரும்பத்தக்கதன்று.
- மறைமுக வரி - ஒரு வரி, அதன் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியும்.
- இந்தியாவில் கலால் வரி - மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.
- சரக்கு மற்றும் சேவை வரி (GST) - பொருள்கள் மற்றும் சேவைகளின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் ஒரு வகையான வரி.
- – திருவள்ளுவர்
”சூரியன், தான் பூமியிடமிருந்து உறிஞ்சிய ஈரப்பதத்தை பன்மடங்கு திருப்பித் தருகிறது. அதுேபால, மன்னன் தன் குடிமக்களிடம் வரி வசூலித்து, அவர்களின் நலத்திற்காகேவ மீண்டும் செலவுய்கிறான்.” - காளிதாஸ்
VII) கலைச்சொற்கள்
- சமத்துவம் (Equality) - சம வாய்ப்புகள்.
- வசதி (Convenience) - சிரமமின்றி எதையாவது தொடரக்கூடிய நிலை.
- விகிதாச்சார (Proportional) - சமமான.
- பிற்போக்கு வரி (Regressive) - குறைந்த வருமானம் உள்ளவர்களிடமிருந்து விகிதாச்சாரமாக அதிக தொகையை வசூலிப்பது.
- மரபுரிமை (Inherited) - இதற்கு முன் வைத்திருப்பவர் இறப்பிற்கு பின் வாரிசுதாரர் பெறுவது.
- குவிக்க (Accumulate) - ஒன்றுசேர்.
- மானியம் (Subsidize) - பங்களிக்க.
- துன்புறுத்தல், அடக்குமுறை (Persecution) - ஒரு நபர் அல்லது ஒரு குழுவை நியாயமற்ற முறையில் நடத்துவது குறிப்பாக அவர்களின் சமய அல்லது அரசியல் நம்பிக்கைகள் காரணமாக.
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS