தமிழக அரசு ஐடிஐ-யில் நிரந்தர அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி. கடைசி நாள்: 30.09.2026. சம்பளம் ரூ.15,700 – ரூ.50,000/-
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 8ஆம் வகுப்பு தகுதிக்கு அரசு வேலை 2026
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1 காலிப்பணியிடம் உள்ளது.
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1 காலிப்பணியிடம் உள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு – முக்கிய தகவல்கள்
- நிறுவனம் : அரசு தொழிற்பயிற்சி நிலையம், காஞ்சிபுரம்
- பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
- காலிப்பணியிட எண்ணிக்கை: 1
- விண்ணப்பிக்கும் முறை: நேரில் / விரைவு தபால்
- கடைசி தேதி: 30.09.2026
- கடைசி நேரம்: மாலை 5.45 மணி
காலிப்பணியிட விவரம்
- அலுவலக உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை: 1
கல்வித்தகுதி
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வந்து சேர வேண்டும்.
- காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
வயது வரம்பு
- 01.07.2026 அன்று கணக்கிடப்படும் வயதின்படி குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும்.
- பொதுப்பிரிவினர் – அதிகபட்சம் 32 வயது
- BC / MBC / DNC – அதிகபட்சம் 34 வயது
- SC / SCA / ST மற்றும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – அதிகபட்சம் 37 வயது
கூடுதல் வயது தளர்வு
- SSLC-க்கு மேல் கல்வித்தகுதி பெற்ற BC/MBC/SC/SCA/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்
- சம்பள விகிதம் : Level-1 - Rs.15,700 – Rs.50,000/-
விண்ணப்பிக்கும் முறை
- கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணியிடத்திற்குத் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை (Self Attested) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
எண்.26, புத்தேரி தெரு,
கைலாசநாதர் கோவில் பின்புறம்,
காஞ்சிபுரம் – 631 502.
முக்கியமான அறிவுறுத்தல்கள்
- தகுதியற்ற விண்ணப்பங்கள், காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |

COMMENTS