Tnpsc group 4 questions paper,tnpsc group 4,tnpsc group 4 general tamil,tnpsc group 4 complete study material,group 4exam online test,tnpsc vasyllabus
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப் 4 (Group 4 Tamil Study Material) தேர்வுகளில் கேட்கப்பட்ட தமிழ் வினாக்கள் மற்றும் விடைகள் அனைத்தும் தொகுத்து கீழே தரப்பட்டுள்ளது. தினமும் பழைய வினாத்தாள்களில் உள்ள தமிழ் வினாக்கள் மற்றும் விடைகளை படிப்பதன் மூலம் பொதுத்தமிழ் பகுதிகள் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
TNPSC 2019 Group 4 - Tamil Question & Answer |
TNPSC 2019 Group 4 - Tamil Questions & Answer Part 1
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
(A) அகநானூறு
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) பரிபாடல்
Answer : (C) நற்றிணை
2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது ?
(A) பரிபாடல்
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து
Answer : (A) பரிபாடல்
3. தவறான இணையைத் தேர்வு செய்க:
(A) குறிஞ்சி - கபிலர்
(B) முல்லை - ஓதலாந்தையார்
(C) மருதம் - ஓரம்போகியார்
(D) நெய்தல் - அம்மூவனார்
Answer : (B) முல்லை - ஓதலாந்தையார்
4. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க
(A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
(B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
(C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
(D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Answer : (B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
5.செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு
(A) உவமை
(B) அடுக்குத்தொடர்
(C) எண்ணும்மை
(D) உருவகம்
Answer : (D) உருவகம்
6) "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் நுண்டாகச் செய்வான் வினை"
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது ?
(A) படை கவசம்
(B) படை கருவிகள்
(C) கைப்பொருள்
(D) வலிமையான ஆயுதம்.
Answer : (C) கைப்பொருள்
7. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
(A) பொழிப்பு எதுகை
(B) கூழை எதுகை
(C) மேற்கதுவாய் எதுகை
(D) கீழ்க்கதுவாய் எதுகை
Answer : (B) கூழை எதுகை
8. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம். இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க
(A) கூழை எதுகை
(B) மேற்கதுவாய் எதுகை
(C) கீழ்க்கதுவாய் எதுகை
(D) பொழிப்பு எதுகை
Answer : (B) மேற்கதுவாய் எதுகை
9. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
(A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
(B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
(C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா ?
(D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
Answer : (B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
10. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
(A) உம்மைத்தொகை
(B) பெண்பால் பெயர்கள்
(C) எண்ணும்மை
(D) அன்மொழித்தொகை
Answer : (C) எண்ணும்மை
11. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
(A) மிகும்
(B) மிகாது
(C) சில இடங்களில் வரும்
(D) சில இடங்களில் வராது
Answer : (A) மிகும்
12. தாழ்பூந்துறை என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
(A) ஏவல் வினைமுற்று
(B) உரிச்சொல் தொடர்
(C) பண்புத்தொகை
(D) வினைத்தொகை
Answer : (D) வினைத்தொகை
13. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
(A) பழுத்த பழம்
(B) பழுக்கும் பழம்
(C) பழுக்கின்றது
(D) பழங்கள் பழுத்தன
Answer : (C) பழுக்கின்றது
14. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
(A) படித்து
(B) படித்தல்
(C) படித்த
(D) பாடுதல்
Answer : (A) படித்து
15. "கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
(A) கற்றல்
(B) கற்பனை
(C) கண்டான்
(D) கல்லை
Answer : (A) கற்றல்
16. "இயல்பானது" வேர்ச்சொல்லறிக
(A) இயல்
(B) இயல்பு
(C) இயைபு
(D) இய
Answer : (B) இயல்பு
17. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) தலைவன்
(C) அரண்
(B) நெருப்பு
(D) அம்பு
Answer : (D) அம்பு
18. குழலியும் பாடத் தெரியும் தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
(A) குழலிக்குப் பாடத்தெரியும்
(B) குழலியின் பாடத்தெரியும்
(C) குழலி பாடத்தெரியும்
(D) குழலியால் பாடத்தெரியும்
Answer : (A) குழலிக்குப் பாடத்தெரியும்
19. தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:
(A) அனுமதி
(B) ஈசன்
(C) குபேரன்
(D) மணிமுடி
Answer : (D) மணிமுடி
20. பொருந்தா இணையைச் சுட்டுக
(A) குறிஞ்சி - யாமம்
(B) முல்லை - மாலை
(C) மருதம் - நண்பகல்
(D) நெய்தல் - ஏற்பாடு
Answer : (C) மருதம் - நண்பகல்
COMMENTS