tnpsc daily current affairs pdf in tamil,tnpsc study material,tnpsc portal current affairs pdf download,tnpsc gk,tnpsc group 2 current affairs,group 4
TNPSC Current Affairs - Group 1, Group 2 & 2a, Group 4
TNPSC, TET, TRB, POLICE (SI & PC), RAILWAYS போன்ற அனைத்து போட்டி தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளை தினமும் படிப்பதன் மூலம் எளிமையாக விடை அளித்து விடலாம்.
![]() |
April 1 - Current Affair Notes in Tamil |
தினமணி மற்றும் தினஇந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் இதை படித்தால் மட்டும் போதும், எளிமையாக விடை அளித்து விடலாம்.
April 1 - Daily Current Affairs Notes
நமது இணைய தளத்தில் (www.tnpscgk.com) தினமும் நடப்பு நிகவுகள் மற்றும் இலவச தேர்வுகள் வழங்கப்படுகிறது.
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
இந்தியா
1) பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் 1-4-2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்து.
2) நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், 1-4-2021 அன்றுதொடங்கியது.
- இரண்டு பசுமை நகரங்கள்,
- ராஜ்கிர் (Rajgir)
- போத்கயா (BodhGaya)
- நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
- இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Rank
1) உலக பாலின இடைவெளி குறியீடு 2021 (Global Gender Gap Index)
- வெளியிட்ட அமைப்பு : உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum )
- மொத்த நாடுகள் : 156
- இந்தியா - 140 வது நாடு
- ஐஸ்லாந்து - முதல் நாடு
விருதுகள்
1) சரஸ்வதி சம்மன் விருது 2020, மராத்திய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே என்பவருக்கு, அவர் எழுதிய ‘சனாதன்’ (sanatan) என்ற நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
- வழங்கப்படும் அமைப்பு - KK பிர்லா பவுண்டேசன் (KK Birla Foundation)
- இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வெளியான மிகச்சிறந்த இலக்கியங்களுக்காக வழங்கப்படும்.
2) 51- வது தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது.
- கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிகழ்வுகள்
1) காா்னிவாக் - கோவ் (Carnivac - Cov Vaccine) என்ற பெயரில், உலகிலேயே முதல்முறையாக கரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை பதிவு செய்துள்ள நாடு - ரஷியா.
2) இந்தியா - மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (India - Mauritius Comprehensive Economic Cooperation and Partnership Agreemen) இன்று (1 ஏப்ரல் 2021) முதல் நடைமுறைக்கு வருகிறது .
- ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாட்டோடு இந்தியா கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும்.
3) ஷந்திர் ஓக்ரோசேனா 2021, (SHANTIR OGROSHENA) Front Runner of the Peace என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகை வங்காளதேசத்தினால் 4-12 ஏப்ரல் 2021 தினங்களில் நடத்தப்படவுள்ளது.
இதில்,
- இந்தியா
- பூட்டான்
- இலங்கை
- வங்காளதேசம்
நாடுகளின் இராணுவங்கள் கலந்துகொள்கின்றன.
பொருளாதாரம்
1) இந்தியாவில் உள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் முழு அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கும் கடன்களை வழங்குவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான வங்கியுடன் (JBIC - Japan Bank for International Cooperation) 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நியமனங்கள்
1) பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியத்தின் (PESB) தலைவராக மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- பிஇஎஸ்பி(PESB) வாரியம் ஒரு தலைவா் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினா்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.
- PESB - Public Enterprises Selection Board
இந்த நடப்பு நிகழ்வுகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
COMMENTS