tnpsc exam materials,tnpsc notes,tnpsc free online test,tnpsc group 4 syllabus,group 4 tnpsc,tnpsc group 1 online test,tnpsc free test series,tnpsc
Group 1, Group 2 & 2a, Group 4 - தினம் ஒரு திருக்குறள் ( தமிழ் & English)
புதிய பள்ளி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறள்களை தினமும் ஒரு திருக்குறளாக கற்போம். இங்கு கொடுக்கப்படும் அனைத்து திருக்குறளும் பள்ளி புத்தகத்தில் உள்ளவை மட்டுமே. TNPSC தேர்வில் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தினமும் ஒரு திருக்குறள் கற்றால் நமக்கு அது மிகவும் எளிமையாக இருக்கும்.
TNPSC recently added Tirukkural as a separate unit in Group 1, Group 2/2A, Group 4 syllabus and it fetches handful of marks as per the question pattern.
Because of Adding Tirukkural into the syllabus it is hard to prepare for other state aspirants who are willing to get tnpsc jobs in Tamilnadu. At the same time, it will be beneficial for Tamilnadu residing aspirants as they are well aware of thirukkural and studying from schooling days itself. After adding 2 new units in the syllabus now TNPSC makes a better way for Tamilnadu students to clear and place the job rather than other states students. tnpsc unit 8 thirukkural important notes and free online test. Group 2 unit 8 thirukkural important notes pdf download.
இன்றைய திருக்குறள் ஏழாம் வகுப்பு (7th Term 3 - Economics Book ) பொருளாதாரப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Day 2 - திருக்குறள் (தமிழ்)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு
அதிகாரம் :- இறைமாட்சி
குறள் எண் :- 385
மு.வரதராசன் :-
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
மணக்குடவர் உரை :-
பொருள் வரும்வழி இயற்றலும், அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்.
பகுத்தல் - யானை, குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை :-
இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்.
ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்.
காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும்.
காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்.
வல்லது அரசு - வல்லவனே அரசன்.
சி. இலக்குவனார் உரை :-
நாட்டுக்குப் பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தலும், உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், காப்பாற்றியுள்ள பொருள்களைப் பயன்படும் வழிகளில் வகுத்துச் செலவிடுதலும் ஆகிய இவற்றுள் வல்லவனே அரசு செய்வதற்குரியவன்.
----------------||---------------||----------------||----------------
Day 2 - Thirukkural (English)
A king is he who treasure gains, stores up, defends,And duly for his kingdom's weal expends
Tamil Transliteration :-
Iyatralum Eettalung Kaaththalum Kaaththa
Vakuththalum Valla Tharasu.
Explanation :-
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
----------------||---------------||----------------||----------------
Day 2 திருக்குறள் - Model Questions & Answers
1. இயற்றலும் ------------ ----------- காத்த
----------- வல்லது அரசு.
சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க ?
D) ஈட்டலும், காத்தலும், வகுத்தலும்
2. அரசன் வல்லவனாக விளங்குவதற்கு வள்ளுவர் கூறுவது யாது ?
E) மேற்கண்ட அனைத்தும்
3. கீழ்க்கண்ட திருக்குறள் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது ?
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த....
இறைமாட்சி
4. கீழ்க்கண்ட திருக்குறள் எந்த இயலில் அமைந்துள்ளது ?
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த...
அரசியல்
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
Useful sir
ReplyDeleteThank you...
ReplyDelete