online test tnpsc,tnpsc unit 8 study material,online test tamil tnpsc,tnpsc online test in tamil,tnpsc vao online test in tamil,tnpsc group 4 syllabus
Tnpsc group 1, group 2 & 2a, group 4, PC, SI, TET, RRB - All government exams free test and pdf notes.
Day 1 - திருக்குறள் |
மு.வரதராசன் உரை :-
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.
மணக்குடவர் உரை:-
தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
பரிமேலழகர் உரை:-
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
நாமக்கல் இராமலிங்கம் உரை: -
(தன்னுடைய செல்வநிலையின்) அளவை அறிந்து வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்யாமல் அளவுக்கு மீறிய வாழ்க்கை நடத்துகிறவனுடைய (ஆடம்பர) வாழ்வு (செல்வங்கள்) உள்ளது போலத் (தோற்றமளித்து) திடீரென்று (செல்வம்) இல்லாதாகி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி கெட்டுப் போகும்.
Day 1 - Important GK Notes
Note :-
மே 3 - உலக பத்திரிகை சுதந்திர தினம்
- யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து ஐ.நா. பொது அவையில் 1993 ஆம் ஆண்டு டிசம்பரில் உலக பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
- அன்றைய தினத்திலிருந்து வின்ட்ஹூக் பிரகடனத்தின் (மே 3) ஆண்டு விழாவானது, உலக பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய தேசிய தலைவர்கள் & பத்திரிகைகள்
Day 1 - Test
கீழ் உள்ள link click செய்து தேர்வு எழுதவும்.

வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
Well done, keep going
ReplyDeleteThank you..
ReplyDelete