Tamil Nadu Government Job 2026: Apply for Record Clerk at Mudukulathur Panchayat Union. 10th pass eligible. Pay up to ₹58,600. Last date: 30.09.2026.
தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு 2026
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2026
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதிவறை எழுத்தர் (Record Clerk) அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 01 காலியிடம் உள்ள நிலையில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,900 – ரூ.58,600 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 01.09.2026 முதல் 30.09.2026 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்
- துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (இராமநாதபுரம் மாவட்டம்)
- பணியின் பெயர்: பதிவறை எழுத்தர் (Record Clerk)
- காலிப்பணியிடங்கள்: 01 இடம்
- பணியிடம்: முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இடஒதுக்கீடு விவரம்
- வகை: ஆதிதிராவிடர் - SC (பொது)
- முன்னுரிமை: முன்னுரிமை அற்றவர்
கல்வித்தகுதி
- தகுதி: பத்தாம் வகுப்பு (10th Std) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பள விவரம்
- மாத ஊதியம்: ₹15,900 முதல் ₹58,600/- வரை
- ஊதிய நிலை: ஊதிய நிலை-02 (Pay Level-02)
வயது வரம்பு (Age Limit as on 01.07.2026)
- பொது வயது வரம்பு: 18 முதல் 37 வயது வரை
- மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை கூடுதல் தளர்வு
- முன்னாள் இராணுவத்தினர்: 18 முதல் 55 வயது வரை
முக்கிய தேதிகள்
- விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தொடக்க நாள்: 01.09.2026
- விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.09.2026 மாலை 05:45 மணி வரை
தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்காணல் அழைப்புக் கடிதம் (Call Letter) தனியே அனுப்பி வைக்கப்படும்
தேவைப்படும் சான்றிதழ்கள்
- கல்விச் சான்று: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்
- சாதிச் சான்றிதழ்: வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் நகல்
- இருப்பிடச் சான்று: சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல்
- சிறப்புச் சான்றிதழ்கள்: மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் (பொருந்துமாயின்)
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்ப வடிவம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்
- விண்ணப்பிக்கும் வழிமுறை: நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம்,முதுகுளத்தூர் – 623 704, இராமநாதபுரம் மாவட்டம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |

COMMENTS